Editorial / 2020 மார்ச் 08 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசார் தீன்
தலவில புனித அன்னமாள் ஆலயத்தின் பங்குனி மாத வருடாந்த திருவிழா, இம்மாதம் 01ஆம் திகதி, கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
நவநாள் ஆராதனைகளைத் தொடர்ந்து, இன்று (08) திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது. சிலாபம் மறை மாவட்ட ஆயர் மெலர்ன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை, மட்டக்களப்பு மாவட்ட மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை ஆகியோர் திருப்பலியை கூட்டாக ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியை தொடர்ந்து, புனித அன்னம்மாளின் திருச்சொரூப பவனி நடைபெற்றது. ஆயர்கள், குருக்கள், அருட் சகோதரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர். பல மாவட்டங்களிலும் இருந்து வருகைதந்த பெருமளவு பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .