2020 ஒக்டோபர் 02, வெள்ளிக்கிழமை

கொரோனா தொற்றுக்குள்ளான புத்தளம்வாசி குணமடைந்தார்

Editorial   / 2020 மே 01 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார் தீன்

கொரோ வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், வெலிக்கந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த புத்தளம் தில்லையடி அல்காசிம் பகுதியைச் சேர்ந்த நபர், பூரண குணமடைந்து,  வீடு திரும்பியுள்ளார்.  

ஏப்ரல் 14 ஆம் திகதி, குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இரண்டு தடைவைகள் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையிலேயே அவர், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .