2020 ஒக்டோபர் 02, வெள்ளிக்கிழமை

பஞ்சவர்ணக் கிளிகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 ஜூலை 02 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசார் தீன்

புத்தளம் நாகவில்லு பகுதியில் வீட்டில் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்ட பஞ்ச வர்ணக்கிளிகளை வைத்திருந்த ஒருவர், புத்தளம் வனஜீவராசிகள திணைக்கள அதிகாரிகளால் நேற்று (01)  கைதுசெய்யப்பட்டுள்ளார். 

பாலாவி விமானப்படை புலனாய்வுப் பிரிவினரினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, நேற்று (01) மாலை வனஜீவராசிகள் திணைக்களத்தினருடன் இணைந்து குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கிளி இலங்கையின் விஷேட பிரிவுகளில் ஒன்றான அலெக்ஸாண்டர் பெர்ரோட் (Alexander Perrot) வகையைச் சார்ந்த  2 மாதக் குஞ்சுகள் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஞ்சவர்ண கிளிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுப்பட உள்ளதாக,  வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .