2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

பாலாவி விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின்,  கல்குடாவ பிரதேசத்தில், நேற்று (21) இரவு இடம்பெற்ற  விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி தலவில பகுதியைச் சேர்ந்த, 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளாரென, கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பாலாவி பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது,  மோட்டார் சைக்கிள்  ஒன்று,  எதிரே வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன்; மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர்  விபத்தில் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும்,  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில்,  உழவு இயந்திர சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--