2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

புத்தளத்தில் 11 பஸ்கள் சேவையில்

Editorial   / 2020 மே 13 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்
புத்தளத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து, அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் போக்குவரத்துக்காக 11 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை புத்தளம் சாலை முகாமையாளர் எச்.எம்.சீ.எச். அபேசிங்க தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புத்தளத்தில் ஊரடங்கு அமுலில் இருந்த காலப்பகுதியில், இ.போ.ச புத்தளம் சாலை, வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கான போக்குவரத்து சேவையை மிகவும் திருப்த்திகரமாக முன்னெடுத்தது.

ஊரடங்கு அமுலில் இருந்த காலப்பகுதியில் எமது சாலையில் கடமைபுரியும் சாரதி, நடத்துநர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் அர்ரப்பணிப்புக்களுடன் பணியாற்றியமையும் இந்த தருணத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.
அதுபோலவே, சுமார் 52 நாடுகளின் பின்னர் புத்தளத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனவே, திங்கட்கிழமை (11) முதல் அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்கள், பொதுமக்கள் போக்குவரத்துக்காக 11 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார். 

அத்துடன் நாளாந்தம் பொதுமக்களின் போக்குவரத்துக்கள் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம எனவும் அவர் தெரிவித்தார்

அத்தோடு, புத்தளத்தில் இருந்து கொழும்புக்கான போக்குவரத்துகள் தோப்பு சந்தி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் புத்தளம் - தோப்பு சந்தி வரை இரண்டு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .