Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
புகையிரதப்போக்குவரத்து சேவையில் நிலவும் பெற்றிடங்களை நிரப்பாவிடின், எதிர்வரும் நாள்களில் புகையிரச் சேவை தடைப்பட நேரிடும் என்றும் நாளை முதல் ஓய்வுபெற்றச் சேவையாளர்கள் விலகிச் செல்வதால், புகையிரத நிலையங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் அனைத்து புகையிர நிலைய பொறுப்பதிகாரி சங்கத் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
புகையிரத நிலையத்தில், கனிஷ்டப் பிரிவில் 400 பேருக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகவும் புகையிர நிலைய அதிபர் சேவையில், 250 பேருக்கு வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அவர் கூறினார்.
இதுவரையிலும் இதை நிரப்புவதற்கான எந்த முயற்சி முன்னெடுக்கப்படவில்லை என்றும் எதிர்வரும் நாள்களில் புகையிரதப் போக்குவரத்து பயணிகள், பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆறு மாத காலமாக, ஓய்வு பெற்ற சேவையாளர்கள் கடமையாற்றி வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள், நாளை முதல் சேவையில் இருந்து விலகிச் செல்கின்றனர் என்றும் அவர் கூறினா்.
அவர்கள் விலகிய பின்னர், ரயில் நிலைய அதிபர்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
“சீனாவில் இருந்து எடுத்து வரப்பட்ட புகையிரதப் பெட்டிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அப்பெட்டிகள், புகையிர நிலைய முகாமையாளர் அநுராதபுரம், வியாங்கொடை போன்ற இடங்களுக்குச் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படாதப் பெட்டிகள் புகையித நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையினால், தற்போது இடப்பிரச்சினைகள் நிலவுகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago