Editorial / 2020 ஜூலை 15 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
தபால்மூல வாக்குப்பதிவுக்காக சென்றுக்கொண்டிருந்த ஆசிரியையின் கழுத்தைக் கட்டி, ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நபர் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, மாதம்பே பொலிஸார் தெரிவித்தார்.
மாதம்பே -பம்பல பிரதேசத்திலேயே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிலாபம் கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆசிரியையின் தங்க நகையே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
மேற்படி ஆசிரியை, பம்பல பகுதியில் அமைந்துள்ள கோட்டக் கல்வி காரியாலயத்துக்கு, வாக்களிப்பதற்காக நடந்துச் சென்றபோதே, இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .