2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

10 வயது சிறுமி துஷ்பிரயோகம்

Editorial   / 2020 ஜூலை 19 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரன் பிரியங்கர 

புத்தளம்- ஆசிரிகம பகுதியில் 10 வயது சிறுமி துஷ்பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தொடர்பில், புத்தளம் பொலிஸார் தீவிர விசார​ணைகளை முன்னெடுத்து வருகின்னறனர்.

மேற்படி சிறுமிக்கு அதிக இரத்தப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.  இதனையடுத்து இச்சிறுமி கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளாரென, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த குழந்தையின் தாயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது,  அப்பெண் இரண்டு முறை திருமணம் செய்துள்ளதுடன், 8 பிள்ளைகள் உள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பெண், தவறான தொடர்பை ​பேணி வந்த நபரொருவரே, இக்குற்றச் செயலுக்கு காரணமானவர் எனத்  தெரியவந்துள்ளதுடன், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய சந்தேக நபரை கைதுசெய்ய பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .