Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 09 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
சட்டவிரோத கசிப்பு விற்பனை நிலையம் ஒன்றை முற்றுகையிடச் சென்ற சிலாபம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பங்கதெனிய பகுதியில் நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் இந்திக எனும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரே படுகாயத்துக்குள்ளானவராவார்.
சம்பவ தினம் இந்த பொலிஸ் கான்ஸ்டபிலும் மற்றொருவருமாகச் சேர்ந்து சட்டவிரோத கசிப்பு விற்பனை நிலையம் ஒன்றை முற்றுகையிடுவதற்காக சிவில் உடையில் சென்றுள்ளனர்.
அவர்கள் சென்று ஒரு வீட்டில் இருந்த ஒரு தொகை கசிப்பைக் கைப்பற்றிக் கொண்டு திரும்புகையில் அங்கு வந்த சிலர் இவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளானதுடன் மற்றவர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்துள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த வாரங்களில் சிலாபம மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பல்வேறு இடங்களில் இவ்வாறு போதைப் பொருள் விற்பனை மற்றும் கசிப்பு விற்பனை போன்ற முற்றுகை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிலாபம் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சொல்லப்படும் இருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago