2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

ஆராச்சிக்கட்டுவவில் வாகன விபத்து; ஒருவர் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 12 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

இன்று பகல் இரண்டு மணியளவில் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வானும் லொறி ஒன்றும் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

சிலாபம் பகுதியிலிருந்து புத்தளம் வழியாக வந்த பாடசாலை வேனும் புத்தளம் பக்கமிருந்து சிலாபம் பக்கமாகச் சென்ற லொறியுமே இவ்வாறு ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் மோதிக்கொண்டுள்ளன.

 இதில் வேன் சாரதி ஸ்தளத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் வேனில் பயணித்த 12 மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.

லொறியில் சென்ற மூவரும் காயங்களுக்காகியுள்ளனர்.  காயங்களுக்குள்ளானவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்து தொடர்பாக சிலாபம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .