2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

நாணயமாற்று நிலையத்தில் கொள்ளை; மற்றைய சந்தேக நபரும் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கொக்கரெல்ல பொலிஸ் பிரிவிலுள்ள  வெளிநாட்டு நாணயமாற்று நிலையமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை முந்தல் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

மேற்படி வெளிநாட்டு நாணயமாற்று நிலையத்தில் 13 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டிருந்தது.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கடந்த 15ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, மேற்படி சந்தேக நபர் தொடர்பான தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், கீர்த்திசிங்ககம பிரதேசத்தில் மேற்படி சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X