Gavitha / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர
பேய் ஓட்டுபவர் என்று சொல்லப்படும் நபரொருவர் வழங்கிய இளநீரைப் பருகிய 60 வயதுடைய தந்தையும் அவருடைய 40 வயதுடைய மகளும் உயிரிழந்த சம்பவமொன்று புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கிரகதோஷ பரிகாரம் மற்றும் ஆரோக்கிய வாழ்வை வேண்டி, சீதுவை - பண்டாரவத்த - ராஜபக்ஷபுற பகுதியைச் சேர்ந்த 10 பேர் அடங்கிய குழுவினர், மேற்படி பேயோட்டியினால் கடந்த சனிக்கிழமை (22) நடத்தப்பட்ட பூசை நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, மேற்படி பேயோட்டியினால் வழங்கப்பட்ட இளநீரைப் பருகிய தந்தையும் மகளும் பாதிக்கப்பட்ட நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே, குறித்த மகள் சனிக்கிழமையன்றும் தந்தை, நேற்று ஞாயிற்றுக்கிழமையும் உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும், இவ்விருவரும் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றும் குறித்த மகளின் நெஞ்சுப் பகுதியில் சலி இறுகிய நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

37 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
56 minute ago
2 hours ago