Gavitha / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு -02 கொம்பனித் தெருவில், பாரிய அளவிலான தொடர்மனைக் கட்டடங்களை நிர்மாணித்து வரும் அல்டெயார் நிறுவனம், யூனியன் பிளேஸ் மற்றும் சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஆகியவை இணையும் பகுதியில், இந்து ஆலயம் ஒன்றை நிர்மாணித்துள்ளது. இந்தப் பிரதேசத்தின் பிரதான பௌத்த விகாராதிபதி விடுத்த வேண்டுகோளை அடுத்தே இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அல்டெயார் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுச் சேவைத்திட்டத்தின் கீழ், இந்த இந்து ஆலயத்தை நிர்மாணித்துள்ளது.
இந்தப் பிரதேசத்தின் பிரதான பௌத்த விகாரையான, கங்காராமை விகாரையின் பிரதம மதகுரு கலபொட ஞானிஸ்ஸ தேரோ விடுத்துள்ள வேண்டுகோளின் பிரகாரமே, இந்த இந்து ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் பௌத்த விகாரை, கிறிஸ்தவ ஆலயம், முஸ்லிம் பள்ளிவாசல் என்பன உள்ளன. இந்து கோயில் இல்லாத குறைபாட்டை நீக்கும் வகையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. பிரதேசத்தின் சமய மற்றும் இன நல்லுறவையும் சகவாழ்வையும் பேணும் வகையில் இந்தக் கோரிக்கை அமைந்தது. கங்காராமை விகாரைக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதியில் முழுக்க முழுக்க இந்தியாவின் கலை வடிவங்களைப் பின்பற்றி இந்த ஆலயம்
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026