2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையுடன் தடையில்லா வர்த்தகம்; பேச்சுவார்த்தை தொடர இந்தியா இணக்கம்

Super User   / 2010 மே 14 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையுடன் தடையில்லா வர்த்தகப் பேச்சு வார்த்தைகளை தொடர இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளிலும் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே சில வர்த்தகங்களில் நெருங்கிய பொருளாதார தொழில் வர்த்தகக் கூட்டு ஒப்பந்தம் என்ற அடிப்படையில் இலங்கையும் இந்தியாவும் தடையில்லா வர்த்தகத்தை தொடர்ந்து வருகின்றன.

இந்த ஒப்பந்தந்திற்கு புத்துயிரூட்டுவது மற்றும் தடையில்லா வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பது குறித்த பேச்சு வார்த்தைகளை இம்மாத இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்வுடன் இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் மேற்கொள்வார் என தெரியவந்துள்ளது.

இந்த வர்த்தகத்தின் கீழ் இலங்கை மேலும் 32 புதிய உறபத்தி பொருள்களுக்கான தடையை நீக்க விரும்புவதாகவும் அதே நேரம் இந்தியா 114 பொருள்களுக்கு தடையை நீக்க விரும்புகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோலல், சேவை துறையை பொருத்த வரை இந்தியா புதிதாக 80 சேவைகளுக்கும் இலங்கை 20 சேவைகளுக்கும் தடையில்லா வர்த்தகத்தின் மூலம் அனுமதியளிக்க விரும்புகின்றன.

இதேவேளை, இந்த தடையில்லா வர்த்தகத்தின் மூலம் இலங்கை மாத்திரம் அதிகளவிலான பயனை அடையப்போகின்றது என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களையும் நிருபமா ராவ் எச்சரித்துள்ளார்.

பொருளாதார தொழில் வர்த்தகக் கூட்டு ஒப்பந்தத்தை செம்மைப்படுத்துவதன் மூலம் தடையில்லா வர்த்தகத்தில் வெற்றியடைய முடியும். என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் இது குறித்து முடிவெடுக்க இஅலங்கைக்கு இதுவே சரியான தருணம் என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

தடையில்லா வர்த்தகம் மூலமாக நாட்டு மக்கள் எல்லை தாண்டியும் சுதந்திரமாக தொழில்களுக்கு தேவையானவற்றை வாங்க முடியும் என்பதால் உள்நாட்டு இலாபம் அதிகமில்லாத தொழில்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். இதனால் சிறு வியாபாரிகளின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் என்றும் நிருபமா ராவ் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .