2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் அறிமுகமானது TVS NTORQ 125

ச. சந்திரசேகர்   / 2018 செப்டெம்பர் 16 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


TVS மோட்டார்க் கம்பனி, தனது முதலாவது மதிநுட்ப ஸ்மார்ட் ஸ்கூட்டரான TVS NTORQ 125ஐ, இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. TVS SmartXonnect* எனும் தொழில்நுட்பக் கட்டமைப்புடன், இலங்கையின் முதலாவது அலைபேசியுடனான இணைப்பைக் கொண்ட ஸ்மார்ட் ஸ்கூட்டராக, இது அமைந்துள்ளது. இளைஞர்களை இலக்காகக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், TVS ரேசிங் கட்டமைப்பின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகள் கொண்ட CVTi-REVV 3 Valve என்ஜினுடன் விற்பனையாகின்றது.

இதன் அறிமுக நிகழ்வு, அண்மையில் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், TVS மோட்டார்க் கம்பனியின் சர்வதேச வியாபாரங்களுக்கான சிரேஷ்ட உப தலைவர் ஆர். திலிப் கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்தத் தயாரிப்புகளை வடிவமைப்பதில், TVS மோட்டார்க் கம்பனி, எப்போதும் கவனஞ்செலுத்தி வருகிறது. TVS NTORQ 125 அறிமுகத்துடன், இலங்கையில் ஸ்கூட்டர்களைக் கொள்வனவு செய்ய எதிர்ப்பார்க்கும் இளம் தலைமுறையினருக்கு, அதிகளவு அம்சங்கள் நிறைந்த கண்கவர் தயாரிப்பை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. TVS SmartXonnect* அடங்கலாக, சுமார் 30 உள்ளம்சங்களை முதன் முறையாகத் தன்வசம் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், நாட்டின் ஸ்கூட்டர் சந்தையில் அதிகளவு வரவேற்பைப் பெறும் என்பதில், நாம் உறுதியான நம்பிக்கைக் கொண்டுள்ளோம்” என்றார். 

புதிய TVS NTORQ 125 அறிமுகம் தொடர்பில், TVS லங்கா பிரைவேட் லிமிட்டெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், ‘இலங்கையில் TVS NTORQ 125அறிமுகம் செய்யப்பட்டுள்ளதையிட்டு, நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில், ஸ்கூட்டர் சந்தை வேகமாக வளர்ந்து வருவதுடன், இளைஞர்கள் இந்தத் தயாரிப்பில் அதிகளவு ஆர்வம் காண்பிக்கின்றனர். எமது புதிய 125cc திறன் கொண்ட ஸ்கூட்டரனது, கவர்ச்சிகரமான தோற்றம், ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் வினைத்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால், அதிகளவு இளம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கும்’ என்றார்.

கண்கவர் வடிவமைப்பு

ஆகாய விமானம் ஒன்றின் வடிவமைப்புக்கு நிகராக அமைந்த TVS NTORQ 125, எடுப்பான கண்கவர் தோற்றத்தைக் கொண்டுள்ளதுடன், விசேடமான LED பின்புற விளக்குகளைக் கொண்டுள்ளது. எடுப்பான முனைத் தோற்றங்களினால், ஸ்கூட்டருக்கு ஸ்போர்டி தோற்றம் சேர்க்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான ஸ்டப் மஃவ்லர், முன்புற விளக்குக் கட்டமைப்பு மற்றும் கீழ்ப் பகுதி போன்றவற்றுடன், டயமன்ட் கட் அலோய் வீல்கள் போன்ற சிறந்த தோற்றத்தை 
ஸ்கூட்டருக்கு சேர்த்துள்ளன.

தொழில்நுட்ப அம்சம்

TVS NTORQ 125இல், TVS SmartXonnect* எனும் புத்தாக்கமான ப்ளுடூத் தொழில்நுட்ப இணைப்பு அம்சம் காணப்படுகிறது. NTORQ அலைபேசி App உடன் இணைத்துக்கொள்ள முடியும். இதை, கூகுள் பிளே ஸ்ரோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TVS SmartXonnect*இல், முதன் முறையாக அறிமுகம் செய்யப்படும் பெருமளவு அம்சங்கள் அடங்கியுள்ளன. இதில், முழுமையான டிஜிட்டல் ஸ்பீடோ மீற்றர் காணப்படுகிறது, 55 உள்ளம்சங்கள் அடங்கியுள்ளதுடன், இவற்றில், Navigation assist, Top speed recorder, In-built lap-timer, Phone-battery strength display, Last parked location assist, Service reminder, Trip meter மற்றும் Multi-ride statistic அம்சங்களான Street Mode மற்றும் Sport Mode போன்றனவும் அடங்கியுள்ளன.

இந்தப் புதிய ஸ்கூட்டரில் காணப்படும் ஏனைய பிரதான அம்சங்களில், அலைபேசி அழைப்புகள், டிஜிட்டல் மீற்றரில் காண்பிக்கப்படுவதுடன், SMSகள் கிடைத்தவுடன், அவை கிடைத்தமை தொடர்பில் டிஜிட்டல் மீற்றரில் அறிவிக்கப்படும்.

வினைத்திறன்

TVS NTORQ 125இல், புதிய தலைமுறை CVTi-REVV 124.79cc, single-cylinder, 4-stroke, 3-valve, air-cooled SOHC என்ஜின் அடங்கியுள்ளதுடன், இதிலிருந்து, 6.9kW@7500 rpm / 9.4 PS @7500 rpm மற்றும் 10.5 Nm@5500 rpm வெளிப்படுத்தப்படுகின்றன. என்ஜினில் காணப்படும் மேலதிக வால்வினூடாக, ஸ்கூட்டரின் வினைத்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், அதியுச்ச வேகமாக, 95 kmph வரை பயணிக்க முடியுமென, பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. TVS NTORQ 125இல், பிரத்தியேகமான exhaust note அடங்கியுள்ளது.

சௌகரியம், பாதுகாப்பு மற்றும் வசதி

ஸ்கூட்டரைச் செலுத்துபவருக்கு, அதிகளவு வசதி மற்றும் சௌகரியத்தைப் பெற்றுக் கொடுப்பதைக் கவனத்திற்கொண்டு, TVS NTORQ 125 வடிவமைக்கப்பட்டுள்ளது. 110x80x12 டியுப்லெஸ் டயர்களைக் கொண்டுள்ளதுடன், சகல வீதிகளிலும் பயணிக்கக்கூடிய வகையில், டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷனையும் கொண்டுள்ளது.

Pass by switch, Dual side Steering lock, Parking brakes மற்றும் Engine kill switch போன்ற அம்சங்களும், பயணத்துக்குச் சிறந்த அனுபவத்தைச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. பாவனையை இலகுவாக்கும் வகையில், வெளிப்புறமாக எரிபொருள் நிரப்பும் மூடியை TVS NTORQ 125 கொண்டுள்ளது. USB charger, இருக்கைக்கு கீழான அதிகளவு இடவசதி மற்றும் TVS காப்புரிமையைப் பெற்ற EZ பிரதான ஸ்டான்ட் போன்றனவும் அடங்கியுள்ளன.

பயணிப்பவருக்கு அதிகளவு பாதுகாப்பை வழங்கும் வகையில், Disc மற்றும் Drum, பிரேக் கட்டமைப்புகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நான்கு வர்ணத் தெரிவுகளில், இலங்கையில், TVS NTORQ 125 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், Metallic Blue, Metallic Grey, Matte Red மற்றும் Matte Green ஆகியன அடங்கியுள்ளன. பகல் வேளையிலும் ஒளிரும் விசேடமான மின்குமிழ் கட்டமைப்பையும் (DRL) கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X