2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

கனேடிய வர்த்தக ஆணையாளர் இலங்கை விஜயம்

Super User   / 2010 மே 11 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனேடிய உதவித் துணை அமைச்சரும் ஆசியா மற்றும் ஆபிரிக்கா வர்த்தக ஆணையாளருமாகிய கென் சண்குவிஸ்ட், இலங்கைக்கான சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

அரச அதிகாரிகள், வர்த்தக கூட்டுத்தாபனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் மக்கள் அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை நடாத்துவற்காகவே அவரது விஜயம் அமையவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, கனடாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பலதரப்பட்ட வர்த்தக வாய்ப்புக்கள் மற்றும் அரசியல் விடயங்கள் உள்ளிட்ட இருதரப்பு நலன்களுடன் தொடர்புடைய அம்சங்களில் பேச்சுக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1973ஆம் ஆண்டு கனடாவின் வர்த்தக ஆணையாளர் சேவையில் இணைந்துகொண்ட கென் சண்குவிஸ்ட், 1998௨001ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்தோனேசியாவின் கனேடியத் தூதுவராக கடமையாற்றியுள்லார். 

வர்த்தக மற்றும் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர், வர்த்தக அபிவிருத்தி கொள்ளைச் செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர், வர்த்தக ஆணையாளர் சேவையின் பணிப்பாளர், சர்வதேச வர்த்தக உதவித் துணை அமைச்சர், உலகச் சந்தைக் கிளையின் உதவித் துணை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை இவர் கனேடிய அரசாங்கத்தில் வகித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .