2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

சிறுவர் சேமிப்பில் புரட்சியை ஏற்படுத்தும் கார்கில்ஸ் வங்கி

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார்கில்ஸ் வங்கி புதிதாக வடிவமைக்கப்பட்ட நிலையான வைப்புத் திட்டத்தை சிறார்களுக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்துவதாக சமீபத்தில் அறிவித்துள்ளது. 

இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே நீண்ட கால அடிப்படையில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் வளர்க்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வேறு எந்தவொரு வங்கியுடனும் ஒப்பிடுகையில் சிறார்களுக்கு உண்மையான பெறுமதியைக் கொடுக்கும் கார்கில்ஸ் வங்கி, குழந்தையின் எதிர்காலத்தின் நிதி அம்சத்திற்கு பாதுகாப்பு உத்தரவாதம் மற்றும் குழந்தையின் உரிமைகளைப் பாதுகாக்கும் கடமை ஆகியவற்றின் மூலம் உதவுவதே இத்திட்டத்தின் கருப்பொருள் எனக் குறிப்பிட்டுள்ளது. 

சிறார்களுக்கான நிலையான வைப்பு ஒரு வருட புதுப்பிக்கத்தக்க அடிப்படையில் இடப்படுவதுடன், பராயமடையாதவர் 18 வயதை அடையும் வரை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும். தேவையான வயதை எட்டும் வரை நிதியை மீளப்பெற முடியாது என்பதால் குழந்தைக்கு அது 18 வயதை எட்டும் வரையில் பாதுகாப்பு உறுதி கிட்டுகின்றது. 

18 வயது வரையான பராயமடையாத எவரும் இந்த சிறுவர் நிலையான வைப்புத் திட்டத்திற்கு தகுதியுடையவர் என்பதுடன், இது பிற வங்கிகளுடன் ஒப்பிடும்போது நிகரற்ற வட்டி வீதங்களை அவர்களுக்கு வழங்குகிறது. 

சிறுவர் நிலையான வைப்புத் திட்டத்திற்கான வட்டி வீதங்கள் சாதாரண நிலையான வைப்புக்களுக்கு பொருந்தக்கூடிய அதே வட்டி வீதங்கள் என்பதுடன்,  அவை குறைக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ இல்லை. 

'ஒரு பொறுப்பான வங்கியாக, சேமிப்பை ஊக்குவிப்பதற்கும், சிறார்களுக்கு பெறுமதியைக் கொடுப்பதற்கும் இதுவே சிறந்த வழியாகும் என்று நாங்கள் கருதுகிறோம், ஏனெனில் இது ஒப்பிட முடியாத வட்டி வீதத்தைக் கொண்டுள்ளது. வளர்ந்தவர் ஒருவர் பராயமடையாத ஒருவரின் சார்பாக ஒரு நிலையான வைப்புத்தொகையை இட்டால், நிலையான வைப்புத்தொகையை அவர் பெயரில் இடும் போது கிடைக்கப்பெறுகின்ற வளர்ந்தோர் அனுபவிக்கும் அதே வட்டி வீதமே சிறுவர் நிலையான வைப்புத் தொகைக்கும் கிடைக்கப்பெறுகிறது. 

சிறுவர் நிலையான வைப்பு வட்டி வீதங்களுக்கும் பிற நிலையான வைப்பு வீதங்களுக்கும் எவ்விதமான வேறுபாடும் கிடையாது,' என்று கார்கில்ஸ் வங்கியின் தனிநபர் வங்கிச்சேவைப் பிரிவின் உதவிப் பொது முகாமையாளரான் புத்திக பெரேரா அவர்கள் குறிப்பிட்டார்.

'தற்போது, நாங்கள் 10மூ வரையான வட்டியை வழங்குவதுடன், இது மிக உயர்ந்த ஆண்டு வட்டி வீதமாகும். வங்கியின் புதுப்பித்தல் கொள்கையின் அடிப்படையில் நிலையான வைப்புத் தொகையின் வருடாந்த புதுப்பித்தலில் வட்டி வீதம் மாறும் எனினும், எந்த நேரத்திலும் இது வேறு எந்தவொரு வாடிக்கையாளருக்கும் வழங்கப்படும் அதே வட்டி வீதமாகையால் சிறுவர் நிலையான வைப்புத் தொகையும் அதே வீதம் கிடைக்கப்பெறுகின்றது என்பதை உறுதி செய்வோம். 

இது சில பிற நிலையான வைப்புத் தொகைகள் கொண்டுள்ள வட்டி வீத நடைமுறைகளிலிருந்து வேறுபட்டது,' என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார். 

இலங்கையில் உள்ள பிற வங்கிகளில் பெரும்பாலானவை தலா வைப்புத் தொகை மற்றும் கிடைக்கக்கூடிய கணக்கு மீதியுடன் இணைக்கப்பட்ட குழந்தைகளுக்கான பல பரிசுத் திட்டங்கள் மூலம் சிறார்களை ஈர்க்கும் அதே வேளையில், சிறுவர் நிலையான வைப்புத் திட்டம் குழந்தையின் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடாக இருக்கும் என்று கார்கில்ஸ் வங்கி நம்புகிறது.

பராயமடையாதவருக்கு நிலையான வைப்புத்தொகையை இட்டுக் கொள்ளும் செயல்முறைக்கு வளர்ந்த ஒருவர், அதாவது பெற்றோர் அல்லது பாதுகாவலர் எந்தவொரு கார்கில்ஸ் வங்கி கிளைக்கும் வந்து வைப்பொன்றைத் திறக்கும் எளிய நடைமுறை பின்பற்றப்படுகின்றது. 

தேவையான ஆவணங்களில் பெற்றோர் ஃ பாதுகாவலரின் விவரங்கள் மற்றும் அடையாளம் மற்றும் பராயமடையாதவரின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவை அடங்கியுள்ளன. 

கார்கில்ஸ் வங்கியின் சிறுவர் நிலையான வைப்புத் திட்டம் ஏற்கனவே பொது மக்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது. ஆகவே, பாதுகாவலர்கள் ஃ பெற்றோர்கள் தங்கள் சிறார்களுக்கு நிலையான வைப்புத்தொகையை இட்டுக்கொள்ள முடியும்.

சிறார்களிடையேயும் பெரியவர்களிடையேயும் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்கான மற்றொரு முயற்சியாக, எந்தவொரு கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை மையத்திலும் கொள்முதல் செய்யப்படும்போது, மீதமுள்ள தொகையை சிறுவரின் சேமிப்புக் கணக்கில், கார்கில்ஸ் ஃபூட் சிட்டி விற்பனை மையத்தின் காசாளர் ஊடாக நேரடியாக மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பளித்து பாதுகாவலர்கள் ஃ பெற்றோர்களை வங்கி ஊக்குவிக்கிறது. 

படிப்படியாக பராயமடையாதவரின் எதிர்காலத்திற்கான நிதியியல் இருப்பு பலத்தை பேணிப் பாதுகாக்க இது உதவும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X