2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

தரமான நோயாளர் பராமரிப்பை பேணஆய்வுகூட அங்கிகாரம் முக்கியம்

Editorial   / 2017 மே 31 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார பராமரிப்பாளரின் சிறந்த உறுதிப்பாடு என்பது சாட்சியுடனான மருத்துவத்தில் பயிற்சி பெறுவதுடன், நோயாளியையும் குணப்படுத்துதல் ஆகும். மருத்துவ ஆய்வுகூடங்களின் தொடர்ச்சியான அதிகரிப்புடன், நோயாளி ஒருவருக்கு தனக்கான சேவைகளை பெறுவதில் பல தெரிவுகள் காணப்படுகின்றன. துல்லியமற்ற அறிக்கைகள் நோயாளிக்கு அதிக செலவையும், நேர விரயத்தையும் ஏற்படுத்துவதுடன், அசௌகரியம் காரணமாக மீள் பரிசோதனை அல்லது மீள் மாதிரிகளை வழங்குவதற்காக வேறோர் ஆய்வுகூடத்துக்கு செல்ல நேரிடலாம்.  

இருப்பினும் துல்லியமான அறிக்கைகள் மற்றும் சரியான நேரத்தில் முடிவுகளை விநியோகித்தல் போன்றவற்றை உறுதி செய்வதற்கான பொறுப்பை ஆய்வுகூடங்கள் கொண்டுள்ளன.  

ஆய்வுகூட அங்கிகாரத்தின் முக்கியத்துவம் குறித்து இரசாயன நோய்குறியியல் ஆலோசகரான மருத்துவர் திருமதி.சரோஜா சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “ஆய்வுகூடத்தினால் கடைபிடிக்கப்படும் செயல்முறைகளின் தரம் மதிப்பிடல் மற்றும் முடிவுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தல் ஆகியவற்றை மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படுதலையே அங்கிகாரம் எனப்படுகிறது” என்றார். 

“அனைத்து நோயாளர்களும் மிகத் துல்லியமான மற்றும் நம்பகமான பரிசோதனை அறிக்கைகளை பெறவே விரும்புவதுடன், அதுவே மருந்துவர்களை சரியான மருந்துகளை வழங்க வழிவகுக்கிறது. அங்கிகாரம் பெற்ற ஆய்வுகூடத்தை தெரிவு செய்தலின் போது சரியான தீர்மானத்தை எடுப்பதற்கான வழிகாட்டல்கள் நோயாளிக்கு வழங்கப்பட வேண்டும்.  

இருந்தபோதிலும், அங்கிகாரத்துக்ான சட்ட ரீதியான தேவைப்பாடு இலங்கையில் இல்லை. இருப்பினும், பல்வேறு மருத்துவ ஆய்வுகூடங்கள் அங்கிகாரத்தை பெறுவதற்காக குறிப்பிட்டளவில் முதலீடு செய்துள்ளன. 

அங்கிகாரத்துக்கான முதுகெலும்பாக தேசிய தர நிலைகளை வழங்குவதற்காக ஆய்வுகூடத்தின் செயற்படுகளை மதிப்பிடுவதற்கான கட்டமைப்பை இலங்கை அங்கிகார சபை (SLAB) வழிநடத்தி வருகிறது. தரத்திற்கான சர்வதேச நிறுவகத்தின் ISO 15189 ஆய்வுகூட தரமானது தர முகாமைத்துவ முறைமைகளை குறிப்பிடுவதுடன், மருத்துவ ஆய்வுகூடங்களின் தரம் மற்றும் திறனுக்கான குறிப்பிட்ட தேவைப்பாட்டினை உறுதி செய்வதாக வடிவமைக்கப்பட்டுள்ளன” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

“SLABஆனது ஆய்வுகூடங்களின் தரத்தினை மதிப்பீடு செய்வதன் பொருட்டு தர அங்கிகாரத்துக்கான தேசிய தரமான தரநிலைகளை வழங்குகின்றது. ஒவ்வொரு மருத்துவ ஆய்வுகூடத்திலும் அங்கிகாரமளிக்கப்பட்ட பரிசோதனைகளை SLAB வலைத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம்” என, அவர் மேலும் தெரிவித்தார்.  

“அமெரிக்கன் நோய்குறியியல் கல்லூரியானது அமெரிக்காவின் தொழில்முறையான நோயியல் நிபுணர்களைக் கொண்ட அமைப்பாகும். இவ்வமைப்பானது உலகத்தரம் வாய்ந்த மிகச்சிறந்த தரநிலையை (Gold Standard) நிர்ணயிக்கும் அமைப்பாகிய வகையில், உலகிலுள்ள குறியீட்டு மருத்துவ ஆய்வுகூடங்களின் மருத்துவ சோதனைகளை மிகச்சிறந்த நிலையில் உள்ளதா என்பதை நிர்ணயித்து உறுதியளிக்கிறது” எனவும் தெரிவித்தார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X