2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

புதிய ICTA சபை நியமனம்

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையைத் தொழில்நுட்ப ரீதியில் முன்னெடுத்துச் செல்வது எனும் தமது நோக்கத்தின் பிரகாரம், இலங்கை தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பின் (ICTA) பணிப்பாளர் சபைக்கு புதிய நிர்வாகிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நியமித்துள்ளார். துறைசார் முன்னோடிகள், தொழில்நுட்ப தொழில்முயற்சியாளர்கள், கல்விமான்கள், அரச துறை தொழில்நுட்பவியலாளர்கள் என அனுபவம் வாய்ந்த பலரும் இந்த பணிப்பாளர் சபையில் அடங்கியுள்ளனர்.

IFS ஸ்ரீ லங்காவின் இணை ஸ்தாபகரான ஜயந்தி டி சில்வா பணிப்பாளர் சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். துறையில் 35 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், SLASSCOM, BCS Sri Lanka மற்றும் Software Exporters’ Association of Sri Lanka ஆகியவற்றின் முன்னாள் தவிசாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ICTA மற்றும் UCSC ஆகியவற்றின் கடந்தகால அங்கத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ICTA பணிப்பாளர் சபையில் நியமிக்க ப்பட்டுள்ளவர்களுள் துறைசார் நிபுணர்களான, SLASSCOM முன்னாள் தலைவரும் 99X Technology இன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம், தொழில்நுட்பவியலாளரும் WSO2 இன் ஸ்தாபகருமான கலாநிதி. சஞ்ஜீவ வீரவரன, SLIIT இன் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர். லலித் கமகே, ICTA இன் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர். லலித் கமகே, SAP இந்தியாவின் இலங்கைக்கான விற்பனை முகாமையாளர் மனோரி உனம்புவே மற்றும் முன்னாள் டிஜிட்டல் செயலாளரும் ICTA நிகழ்ச்சி பணிப்பாளருமான வசந்த தேசப்பிரிய ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இந்தப் பணிப்பாளர் சபை 2019 டிசெம்பர் 18 ஆம் திகதி முதல் இயங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளதுடன், இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபடும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .