2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

பீப்பள்ஸ் லீசிங்குக்கு இரண்டு விருதுகள்

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீப்பள்ஸ் லீசிங், 55ஆவது CA ஸ்ரீ லங்கா நிதி அறிக்கைகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் 2018/19 ஆண்டுக்கான நிதி அறிக்கைக்கு இரண்டு விருதுகளை வென்றிருந்தது. நிதிக் கம்பனிகள், லீசிங் கம்பனிகள் (மொத்த சொத்துக்களின் பெறுமதி 20 பில்லியன் ரூபாய்க்கு மேற்பட்டது) பிரிவில் வெண்கல விருதையும், ஒன்றிணைந்த அறிக்கையிடல்: வணிக மாதிரியின் சிறந்த வெளிப்படுத்தல் பிரிவில் வெள்ளி விருதையும் தனதாக்கியிருந்தது. உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் நிறுவனத்தின் நிதி அறிக்கை பெற்றுக் கொண்டுள்ள கௌரவிப்புகளினூடாக, நிதி அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சமூக பொறுப்புணர்வு ஆகியவற்றை பேணுவதில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

CA ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிதி அறிக்கைகள் நிகழ்வு, நாட்டில் காணப்படும் பெருமைக்குரிய மற்றும் பழமையான கூட்டாண்மை நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு போட்டியில் மொத்தமாக 130 நிறுவனங்கள் வௌ;வேறு பிரிவுகளில் போட்டியிருந்தன. 

SAFA சிறந்த வெளிப்படுத்தப்பட்ட நிதி அறிக்கைகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வில் நிதிச் சேவைகள் பிரிவில் இணை வெற்றியாளராக பீப்பள்ஸ் லீசிங் 2017/18 நிதி அறிக்கை தெரிவு செய்யப்பட்டிருந்தது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஆளுகை போன்றவற்றுக்காக இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .