2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்துக்கு விருதுகள்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்துக்கு, 18ஆவது ‘SLIM-NASCO- 2018’ விருதுகள் வழங்கும் நிகழ்வில் தங்கம் மற்றும் இரண்டு வெண்கல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.  

ஆண்டின் சிறந்த பிராந்திய முகாமையாளருக்கான ‘SLIM-NASCO- 2018’ தங்க விருது மதுகம கிளை முகாமையாளர் ஆர்.எம். சமீர ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்டது. இதே பிரிவில் வெண்கல விருதை, பீப்பள்ஸ் லீசிங் கண்டி கிளையின் Al Safa நிதியியல் பிரிவின் முகாமையாளர் முஹமட் ரிலா முஹமட் அமீன் பெற்றுக் கொண்டார்.  

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் முன்னிலையாளருக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வில் வெண்கல விருதை பீப்பள்ஸ் லீசிங் ஹோமகம கிளையின் ஊழியரான புபுது சோமபிரிய பெற்றுக் கொண்டார்.  

‘SLIM-NASCO’ விருதுகள் வழங்கும் நிகழ்வு வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுவதுடன், இலங்கையின் சந்தைப்படுத்தல் துறைக்கு பெறுமதி சேர்க்கும் திறமையான நிபுணர்களின் புத்தாக்கமான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--