2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மார்பகப் புற்றுநோய் சோதனைக்கு 20% கழிவு வழங்கும் செலிங்கோ ஹெல்த்கெயார்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்பகப் புற்றுநோய் இன்று சமூகத்தில் தனிநபர்கள் மத்தியிலும் சமூக மட்டத்திலும் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஒரு நோயாக மாறியுள்ளது. மார்பகப் புற்றுநோய் பற்றி வழிப்புணர்வை ஏற்படுத்தும் மாதமாக உலகளாவிய ரீதியில் ஒக்டோபர் மாதம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையிலும் இந்த மார்பகப் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும் வகையில் அதை நேரகாலத்தோடு கண்டறியும் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் திட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களோடு இணைந்து செலிங்கோ ஹெல்த்கெயார் நிறுவனமும் செயற்படவுள்ளது.

இலங்கையில் ஆயுள் காப்புறுதித் துறையில் தலைமை தாங்கும் நிறுவனமான செலிங்கோ லைஃப் நிறுவனத்துக்கு முற்றிலும் சொந்தமான கிளை நிறுவனமான செலிங்கோ ஹெல்த்கெயார் அக்டோபர் மாதம் முழுவதும் முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கையாக மார்பகப் புற்றுநோய் ஸ்கிரினிநு; சோதனைகளை மேற்கொள்ளும் தனிநபர்களுக்கு 15 வீதமும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழுவினருக்கு 20 வீதமும் கழிவுகள் வழங்கப்படும் என் அறிவித்துள்ளது.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான முதலாவது கட்டணத் திட்டம் மருத்துவ ஆலோசனை, மெமோகிராம், மார்பக ஸ்கேன் என்பனவற்றை உள்ளடக்கியதாக ஷம் 6375 ரூபா கட்டணத்தைக் கொண்டதாக ஷம் அமையும். சாதாரணமாக இவற்றுக்கான கட்டணம் 7500 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட பெண்கள் ஒரு குழுவாக இணைந்து இந்த கட்டணத் திட்டத்தை பெற்றுக் கொள்கின்ற போது ஒருவருக்கான கட்டணம் 6000 ரூபாவாக இருக்கும் என்று கம்பனி அறிவித்துள்ளது.

இரண்டாவது கட்டணத் திட்டம் 40 வயதுக்கு கீழ்பட்ட பெண்களுக்கானது. இது 3250 ரூபாவில் இருந்து 2750 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ ஆலாசனை மற்றும் மார்பக ஸ்கேனிங் என்பனவற்றை உள்ளடக்கியது. அக்டோபர் மாதத்தில் இந்தப் பிரிவுக்கான குழுவுக்குரிய கட்டணம் ஒரு நபருக்கு 2600 ரூபாவாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக ஒக்டோபர் மாதத்தில் மேற்சொன்ன கட்டணத் திட்டத்தைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு Abdominal Scan, Pap smears மற்றும் CA 125 ஆகிய சோதனைகளுக்கான கட்டணத்திலும் விஷேட கழிவுகள் வழங்கப்படும் என்று நிலையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த நிலையத்தின் பேஸ்புக் பக்கத்துக்கு விஜயம் செய்பவர்களுக்கும் விஷேட சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

'மார்பு புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து உரிய சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் அதனை வெற்றிகொள்ள முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான பெண்கள் தமது வழமையான சுகாதாரப் பராமரிப்பு திட்டத்தின் கீழ் அவ்வப்போது புற்றுநோய் சோதனைகளை மேற் கொள்ளத் தவறிவிடுகின்றனர்' என்று கூறினார் இந்த நிலையத்தின் சிரேஷ்ட மருத்துவ அதிகாரி டொக்டர் சாருக்கி வீரசூரிய. 'ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் அக்டோபர் மாதத்தில் பெண்கள் மத்தியில் மேற்கொள்ளப்படும் வழிப்புணர்வு செயற்பாடுகளை நாமும் இங்கு ஊக்குவித்து வருகின்றோம். இதற்கான கட்டணம் கிட்டத்தட்ட ஒரு தரமான சிற்றுண்டிச் சாலையில் ஒருவேளை உணவுக்கு சமமான தொகை. ஒரு வேளை உணவுக்கான தொகையில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதை தவற விடக் கூடாது' என்று அவர் மேலும் கூறினார்.

செலிங்கோ ஹெல்த்கெயார் நிறுவனம் புற்றுநோயை முன்கூட்டியே கண்டு பிடிப்பதற்கான சகல விதமான நவீன வசதிகளையும் கொண்டுள்ளது. இங்கு வருகை தருபவர்கள் ஆஸ்பத்திரி அற்ற ஒரு சூழலில் தேவையான சோதனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

புற்றுநோயாளர்களை ஆதரிக்கும் ஒரு குழுவின் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான தார்மிக ஆதரவும் இங்கு வழங்கப்படுகின்றது. நோயாளிகள் ஒருவருக்கு ஒருவர் என்ற ரீதியில் நன்கு பயிற்றப்பட்ட ஒரு பராமரிப்புக் குழுவால் கவனிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையத்தின் மார்பு புற்றுநோய் பராமரிப்பு பிரிவு வைத்தியர்கள், கதிர்வீச்சு நிபுணர்கள், நோயியல் நிபுணர்கள், மார்பகப் சத்திரசிகிச்சை நிபுணர்கள், புற்றுநோய் நிபுணர்கள், தாதியர், கதிர் சிகிச்சை நிபுணர்கள், வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கியதாகும். இலக்கம் 2 பார்க் வீதி கொழும்பு-02 என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த நிலையம் நோய் வரலாறை அடிப்படையாகக் கொண்ட ஆபத்து மதிப்பீடு, சிகிச்சை சோதனைகள், மெமோகிராபி, அல்ட்ராசவுண்ட் விசாரணைகள், மற்றும் பல்வகை சிகிச்சை தெரிவு அகிய சேவைகளையும் வழங்குகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .