2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் ஜெனரல் தவணைக்கட்டணங்களை mCash ஊடாக செலுத்தலாம்

Gavitha   / 2016 ஜூலை 13 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT மொபிடெல் நிறுவனத்தின் mCashசேவையின் மூலம் தமது வாடிக்கையாளர்கள் இலகுவாகக் காப்புறுதி தவணைக்கட்டணங்களைச் செலுத்துவதற்காக யூனியன் அஷூரன்ஸ் ஜெனரல் காப்பறுதி நிறுவனம் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் தமது வாடிக்கையாளர்களுக்கு இலகுவான தமது அலைப்பேசியினைப் பயன்படுத்தி நாட்டின் எந்த மூலையில் இருந்தும் தமது காப்புறுதி தவணைக்கட்டனங்களை மேற்கொள்ள முடியும்.

இவ் ஒப்பந்தத்தின் விளைவாக மொபிடெல் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஏனைய வலையமைப்பினை சேர்ந்த வாடிக்கையாளர்களும் சேவைகளைப் பெற்றுகொள்ள முடியும். மேலும் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும் யூனியன் அஷூரன்ஸின் பொது காப்புறுதி பிரிவிற்கான வாகன காப்புறுதி சேவைகள் மற்றும் ஏனைய காப்புறுதி சேவைகளுக்கானத் தவணைக்கட்டணங்களை செலுத்த முடியும். திறன்பேசி பாவனையாளர்கள் மிக இலகுவாக mCash சேவையை செயற்படுத்தி கொள்ள முடிவதுடன் அல்லது mCash App இன் மூலம் பாதுகாப்பான முறையில் தவணைக்கட்டணங்களைச் செலுத்த முடியும். 24 மணி நேரமும் இந்தச் சேவையைப் பெற்றுகொள்ள முடிவதுடன் பணப்பரிமாற்றத்தின் பின்னர் அதனை உறுதிப்படுத்துவதற்கான குறுந்தகவல் ஒன்றும் கிடைக்கப்பெறுவதின் மூலம் நாடு முழுவதும் பாதுகாப்பான வசதியான பணப்பரிமாற்றத்தை SLT மொபிடெல் தமது வாடிக்கையாளர்களுக்கு உறுதி செய்துள்ளது.

யூனியன் அஷூரன்ஸ் ஜெனரல் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப முகாமையாளர் க்ளெமன்ட் பிரனாந்துபுள்ளே கருத்து தெரிவிக்கையில் 'வாடிக்கையாளர்களுக்கு மிக சிறந்த சேவைகளை வழங்கக்கூடிய முறைகளைக் குறித்து நாம் எப்பொழுதும் அக்கறையுடன் உள்ளோம். பணப்பரிமாற்று முறைகளை மேலும் இலகுபடுத்தும் வகையில் பல்வேறு டிஜிடல் பணப்பரிமாற்று முறைகள் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அந்த வகையில் SLT மொபிடெல் நிறுவனத்தின் அஊயளா சேவையானது மிக சிறந்ததும் பாதுகாப்பான சேவையாக இருப்பதுடன் மிக பாதுகாப்பானதாகவும் காணப்படுகின்றது, ஆகையினால் எமது வாடிக்கையாளர்கள் நாட்டின் எப்பகுதியிலிருந்தும் எந்த நேரத்திலும் தமது காப்புறுதி தவணைக்கட்டணங்களை செலுத்த முடியும்' என கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X