2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

உலகின் மிகவும் மலிவான 10 நகரங்களில் கொழும்பு உள்ளடக்கம்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 06 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகவும் மலிவான 10 நகரங்களில் கொழும்பு நகரமும் உள்ளடங்கியுள்ளது.

பொருளாதார புலனாய்வு பிரிவின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு பகுதியின் மூலம் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து இது தெரியவந்துள்ளது.

இந்த 10 நகரங்களில் உள்ளடங்கும் ஏனைய நகரங்களாக மும்பாய், புதுடெல்லி, கராச்சி, காத்மண்டு, அல்ஜேரியாவின் தலைநகரான அல்ஜியர்ஸ், ரொமேனியாவின் புசாரெஸ்ட், பனாமா நகரம், சவுதி அரேபியாவின் ஜெதா மற்றும் ஈரானிய தலைநகரான தெஹ்ரான் போன்றன உள்ளடங்குகின்றன.

ஆசிய பிராந்தியத்தை சேர்ந்த 6 நகரங்கள் இந்த பட்டியலில் உள்ளடங்கியுள்ளமை விசேட அம்சமாகும். இதேவேளை ஜப்பானின் டோக்கியோ நகரம் உலகின் அதிகளவு செலவீனம் நிறைந்த நகரமாக பட்டியல்படுத்தப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X