2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

'புரோ ஃபூட்ஸ் 10' கண்காட்சிக்கு சி.பி.எல். அனுசரணை

Super User   / 2010 ஓகஸ்ட் 20 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உணவு தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புரோ ஃபூட்ஸ் கண்காட்சிக்கு சி.பி.எல். நிறுவனம் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. இந்த கண்காட்சியின் மூலம் உணவு தயாரிப்பாளர்கள், கொள்வனவாளர்கள் மற்றும் பாவனையாளர்கள் போன்ற அனைத்து தரப்பினரையும் ஒரே இடத்தில் சந்திக்கச் செய்து, மேலும் தமது செயற்பாடுகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

இந்த உணவுக்கண்காட்சி ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சி தொடர்ச்சியான 9ஆவது தடவையாக இலங்கை உணவு பதப்படுத்தல் சம்மேளனம் மற்றும் இலங்கை கண்காட்சி நிறுவனம் என்பவற்றின் ஏற்பாட்டில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த கண்காட்சிகளில் சி.பி.எல். நிறுவனம் பங்குபற்றியிருந்ததுடன், முதல் தடவையாக இம்முறை இந்த கண்காட்சிக்கு பூரண அனுசரணை வழங்கியுள்ளமை விசேட அம்சமாகும். மேலும் சி.பி.எல். நிறுவனத்தின் புதிய பொருட்களும், காட்சி க்கூடங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அனுசரணை குறித்து சி.பி.எல். நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரியுமான நந்தன விக்ரமகே கருத்து தெரிவிக்கையில், இது போன்ற கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம், இலங்கையின் உணவு தயாரிப்பு துறையை மேலும் வலுவடையச் செய்யமுடியும். இத்துறையைச் சேர்ந்த அனைத்து பிரிவினரும் இந்த கண்காட்சியில் பங்குபற்றுவதன் காரணமாக, நாம் இந்த கண்காட்சிக்கு பூரண அனுசரணை வழங்க தீர்மானித்தோம் என கூறினார்.

160 காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், பங்குபற்றும் நிறுவனங்கள் தமது உணவு உற்பத்திப் பொருளின் தன்மைக்கேற்ப, அவற்றை தயாரித்து காண்பிக்கக் கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு காட்சிப்படுத்தப்படும் சிறந்த உணவு தயாரிப்புகளுக்கு வவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளதுடன், சிறந்த காட்சி கூடத்துக்கு பரிசு வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.   
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X