2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

175 வருட நிறைவை கொண்டாடுகிறது இலங்கை வர்த்தக சம்மேளனம்

A.P.Mathan   / 2014 மார்ச் 25 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வர்த்தக சம்மேளனம் தனது 175 வருட நிறைவை கொண்டாடுகிறது. பெருந்தோட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 1839ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி ஒரு வர்த்தக நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தாபனம், தற்போது நாட்டின் வர்த்தக துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இலங்கையின் வர்த்தக துறையில் தனியார் துறையின் ஆதிக்கத்தை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை இலங்கை வர்த்தக சம்மேளனம் முன்னெடுத்து வருகிறது. இலங்கையில் தேயிலை ஏல விற்பனை முறையின் அறிமுகத்துக்கும் சம்மேளனம் ஏதுவாக அமைந்திருந்தது. தற்போதைய ஏல விற்பனைகள் இந்த கட்டிடத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனம் கப்பல் சரக்கு கையாள்கை சம்மேளனம் போன்ற பல அமைப்புகளை வர்த்தக சம்மேளனம் தாபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .