2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சிறந்த தயாரிப்புக்கான விருது பெற்ற 'டிசைனர் ரோலர் டோர்'

Super User   / 2010 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற 'கதெல்ல' கட்டுமாண கண்காட்சியில், 2010 ஆண்டின் சிறந்த தயாரிப்புக்கான விருதை, அமில் இன்டஸ்ட்ரீஸ்  நிறுவனத்தின் 'டிசைனர் ரோலர் டோர்' தயாரிப்புகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பல தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன,
அவுஸ்திரேலியாவின் உயர் தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டிசைனர் ரோலர் கதவுகள் 2010 ஆம் ஆண்டின் சிறந்த தயாரிப்புகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விருதை வழங்கிய CEC event நிறுவனத்தின் உதவி பொது முகாமையாளர் அமில த சில்வாவுடன், அமில் இன்டஸ்ட்ரீஸ்  நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிஹான் அபேசுந்தர, பணிப்பாளர் ஹேஷினி சமரகோன், பொது முகாமையாளர் சுரங்க சாமிந்த ஆகியோர் அடங்கிய நிறுவன அங்கத்தவர்கள் காணப்படுவதை படத்தில் காணலாம். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--