Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது கூட்டுறவு சேவை திட்டங்களை இலங்கையில் முன்னெடுப்பதற்காக முன்னணி அரச சார்பற்ற நிறுவனங்கள் நான்குடன் இணைவதற்கு ஐ.பி.எம். நிறுவனம் முன்வந்துள்ளது.
இத்திட்டத்துக்கமைய 9 நாடுகளிலிருந்து 9 ஐ.பி.எம். நிறுவனத்தின் நிபுணர்களை இலங்கைக்கு வரவழைத்து சிக்கலான திட்டங்களுக்கு தீர்வு வழங்கலில் ஐ.பி.எம். ஈடுபடுத்தியுள்ளது. இது போன்ற திட்டங்களை ஐ.பி.எம். 14 நாடுகளில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்துக்கு அமைவாக ஐ.பி.எம். நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் குழுவொன்று கடந்த மாத காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்து மொறட்டுவை பல்கலைக்கழகம், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மையம் (ICTA) உடன் இணைந்து திட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இத்திட்டம் இலங்கையில் முன்னெடுப்பது குறித்த ஊடகவியலாளர் மாநாடு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மையத்தின் சட்ட ஆலோசகர் ஜயந்த பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் சார்பாக, ஐ.பி.எம். நிறுவனத்தால் இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக இலவசமாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நாம் நன்றிகளை தெரிவிக்கிறோம்.
ஸ்ரீலங்கா அபிவிருத்தி திட்டத்தை நாம் முன்னெடுத்திருந்த கால கட்டத்திலேயே இந்த திட்டத்தை ஐ.பி.எம். நிறுவனம் இலங்கையில் முன்னெடுத்துள்ளது. இது எமக்கு சிறந்த உந்து சக்தியாக அமைந்துள்ளதெனக் கூறினார்.
இந்நிகழ்வின் அடுத்த கட்டமாக 10 நாடுகளைச் சேர்ந்த 10 நிபுணர்கள் அடங்கிய குழு அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தந்து சூழல் மையம், இலங்கை மென்பொருள் மையம் மற்றும் வேர்ல்ட் விசன் போன்ற அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து தீர்வை திட்டங்களில் ஈடுபடவுள்ளது.
ஐ.பி.எம். நிறுவனம் வருடாந்தம் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை சமூக பொறுப்புணர்வு திட்டங்களில் ஈடுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
27 minute ago
39 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
39 minute ago
49 minute ago