2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

இலங்கை வங்கியின் அச்சுவேலிக் கிளைக்கு விருது

Super User   / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஞானசெந்தூரன்)

இலங்கை வங்கியின் அச்சுவேலிக் கிளைக்கு 2009ஆம் ஆண்டுக்கான கடன் வழங்கல் மற்றும் கடன் அறவீடு தொடர்பில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக அண்மையில் ஜயவர்த்தனபுர வங்கிக் கற்கை நிலையத்தில் நடைபெற்ற வைபவத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இலங்கை வங்கியின் அச்சுவேலிக் கிளை முகாமையாளர் த. புவனேந்திரனுக்கு விருது வழங்கிக் கௌரவித்தார்.

2009ஆம் ஆண்டு 138 மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டு அதில் 99.2 வீதம் அறவிடப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டுக்கான கடன் வழங்கல் மற்றும் கடன் அறவீடு தொடர்பிலும் வங்கி முன்னணியில் நிற்பதாகத் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .