2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

புதிய வடிவில் செலான் 'டிக்கிரி பிளஸ்'

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செலான் வங்கி தனது புகழ்பெற்றதும் அர்ப்பணிப்புமிக்கதுமான சிறுவர் கணக்கினை பாரிய, மிகச் சிறந்த மற்றும் புதுப்பொலிவான வடிவில் 'செலான் டிக்கிரி பிளஸ்' என்ற பெயரில் மீள அறிமுகம் செய்துள்ளது.

குவளைகள், பாடசாலைப் புத்தகப் பைகள், ஸ்கிரபிள் போட் மற்றும் வானொலிப் பெட்டிகள் முதல் அன்பளிப்பு வவுச்சர்கள், 'ஓகன்' இசைக்கருவிகள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வரை அடுக்கடுக்கான பரிசுகளை வழங்கும் 'செலான் டிக்கிரி பிளஸ்' கணக்கானது, இலங்கையில் ஒப்பற்ற பெருந்தொகையான பரிசுப் பொருட்களை வழங்கும் ஒரேயொரு சிறுவர் கணக்காக திகழ்வதன் மூலம் சாதனை படைக்கின்றது.

பேங்கொக் கனவுலகத்திற்கான சுற்றுலாவில் 25 சிறுவர்கள் மற்றும் அவர்களது தாய்- தந்தையரும் தமது மனம் விரும்பியதுபோல் இருப்பதற்கான வாய்ப்பினை வழங்கவுள்ளது. 'பேங்கொக் கனவு உலகம்' ஆனது, அதனது பெயர் மிகச் சரியாக குறிப்பிடுவது போன்று  பிரமாண்டமான வேடிக்கை நிறைந்த இந்த பூங்காவின் பிரமிக்கத்தக்க சுற்றுப்புறச் சூழலை அனுபவிக்கும் சந்தர்ப்பத்தினை சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு வழங்கவுள்ளது. மிகவும் அழகாக அமைக்கப்பட்ட பூந்தோட்டங்கள், அவற்றைத் தொடர்புபடுத்தும் நடைபாதைகள், நீர்த் தடாகங்கள், புராதன கோட்டைகள், உணர்ச்சியூட்டும் காட்சிகள் மற்றும் மறக்கமுடியாத 15 இற்கும் மேற்பட்ட சவாரிகள் போன்றவை ஒவ்வொருவரும் பயன்பெறும் வகையில் கனவுலகினை  நனவாக்கும் வகையில் அமையவுள்ளது.

'செலான் டிக்கிரி பிளஸ்' கணக்கானது இப்போது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே வைப்பாளர்களான அனைத்துச் சிறுவர்களும் சாத்தியமான, மிகச் சிறந்த போனஸ் வட்டி வீதத்தினைப் பெற்றுக் கொள்வர். 200,000 ரூபாவினை கணக்கு மீதியாக கொண்டுள்ளவர்களுக்கு 10 வீதம் போனஸ் வட்டி வழங்கப்படுவதுடன் அதனைச் சிறப்பாக பேணும்பட்சத்தில் போனஸ் வட்டியும் அதிகரிக்கும். 300,000 மீதியை பேணுவோருக்கு 15 வீதமும், 400,000 ரூபாவை மீதியாக கொண்டுள்ளவர்களுக்கு 20 வீதமும், 500,000 ரூபாவினை மீதியாக வைத்துள்ளோருக்கு 25 வீதமும், 750,000 ரூபாவை மீதியாக கொண்டுள்ளவர்களுக்கு 30 வீதமும், 1,000,000 ரூபா மீதிக்கு 35 வீதமும், 1,250,000 ரூபாவுக்கு 40 வீதமும், 1,500,000 ரூபாவுக்கு 45 வீதமும் அத்துடன் கணக்கில் 1,500,000 ரூபாவுக்கு அதிகமான மீதியை கொண்டுள்ளவர்களுக்கு மிக உச்ச அளவிலான 50 வீத போனஸ் வட்டியும் வழங்கப்படும்.

'செலான் ரிக்கிரி' என்பது இதனது அசல் கணக்காகும். இது 1992ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கணக்கானது இலங்கையின் முதலாவது பரிசுப் பொருட்களுடன் தொடர்புபட்ட சிறுவர்களுக்கான திட்டமாக திகழ்ந்ததன் மூலம் மிகச் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றது. அப்போது முதல் ஒவ்வொரு வீட்டிலும் பிரபலமான வர்த்தகக் குறியீடாக இருந்து வரும் இக் கணக்கு, கடந்த பல வருடங்களாக ஆயிரக்கணக்கான சிறுவர்களை தம்பக்கம் ஈர்த்துக் கொண்டுள்ளது.

அது மாத்திரமன்றி, இலங்கை சந்தைப்படுத்தல்  நிறுவகம் தனது நாடு தழுவிய விஸ்தரிப்பினை தொடர்ந்து நடத்திய 'வர்த்தக குறியீடு சிறப்புத்துவம் விருதுகள் வழங்கல்' நிகழ்வில் மிகவும் கீர்த்திமிக்க 'ஆண்டின் சிறந்த சேவை வர்த்தகக் குறியீடு' விருதினையும் பெற்றுக் கொண்டது. தற்போது புதுப்பொலிவு பெற்று, மீளஅறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதனது புதிய வடிவமான 'செலான் டிக்கிரி பிளஸ்' கணக்கானது, இலங்கை முழுவதிலும் உள்ள சின்னஞ் சிறார்களின் இதயங்களை கொள்ளைகொள்வதற்கு தயார்நிலையில் உள்ளது.

செலான் வங்கியினால் சேமிப்புப் பழக்கம் சிறப்பாக ஊக்குவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடெங்கிலும் உள்ள 83 பாடசாலைகளில் தமது மாணவர் சேமிப்பு நிலையங்களையும் வங்கி கொண்டுள்ளது. வைப்பாளர்களான சிறுவர்களுக்கு வெகுமதிகளை வழங்கும் செலான் வங்கி  அதேவேளை, மிகச் சிறு வயதிலிருந்தே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன் அது தொடர்பில் அறிவையும் புகட்டுகின்றது. செலான் வங்கியினால் பயிற்சியளிக்கப்பட்ட சிரேஷ்ட மாணவர்களால் சுயமாக இந்த நிலையங்கள் நடத்தப்படுகின்றன. இந்தப் பயிற்சியானது பிற்காலத்திலும் அவர்களுக்கு மிகவும் பயன் தரக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.  அதேநேரம், மிகச் சிறு வயதிலிருந்தே அறிமுகப்படுத்தப்பட்டு, போஷிக்கப்பட்டு வரும் இந்த சேமிக்கும் பழக்கமானது, மேற்படி சிறுவர்கள் வளர்ந்து நாளை பொறுப்புணர்வுள்ள இளைஞர்களாக  உருவாகும் போது அது அவர்களுக்கு சிறந்ததொரு ஆதாரமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரிவு உதவி பொது முகாமையாளர் கமல் தேசப்பிரிய கூறுகையில், ''மீண்டும் இளமைக்குத் திரும்பியுள்ள, அத்துடன் பலம்பெறுவதற்கான அபிலாஷையை கொண்டுள்ள செலான் வங்கியானது இலங்கையிலுள்ள ஒரேயொரு 'அன்புடன் அரவணைக்கும் வங்கி' என்ற வகையில், வெகுஜனங்களின் இதயத்துடிப்பை உணர்ந்து கொள்வதுடன் முழுமையான  அளவில் இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு இசைவாகவும் செயற்படுகின்றது. இலங்கைப் பொதுமக்களின் ஒவ்வொரு வயதுப்பிரிவுக்கும் ஏற்றாற்போல்  தொடர்ச்சியாக புத்தாக்கங்களை மேற்கெள்தல், தமது உற்பத்தி மற்றும் சேவை தொடர்களுக்கு மேலும் சிறந்த பெறுமதியை சேர்த்தல் போன்றவை தொடர்பான செலான் வங்கியின் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே 'செலான் டிக்கிரி பிளஸ்' என்ற பெயரில் சிறுவர் கணக்கினை மீளஅறிமுகப்படுத்தப்படும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.

'எமது நிறுவனத்தின் திருப்பம் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. மிகச் சரியாக சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை உயிர்த்தெழுவது போல் புத்துயிர் பெற்ற செலான் வங்கியானது, வாடிக்கையாளர்களின் நலனுக்காக மேலும் பல்வகைப்பட்ட மநோநிலையில் அவர்களுடன் இடைத்தொடர்புகளைப் பேணுவதற்காகவும் அதனூடாக மிகச் சிறந்த மற்றும் புதுமையான வாய்ப்புக்களை உருவாக்குவதற்காகவும் உயிர்த்துடிப்புள்ள நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுள்ளது' என்றும் தேசப்பிரிய குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--