2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

இலங்கை வங்கியின் வவுனியா மாணவர் கௌரவிப்பு நிகழ்வு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

இலங்கை வங்கியின் வவுனியா கிளையினர் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் சித்தியடைந்த மாணவர்கள் அனைவரையும் கௌரவிக்கவுள்ளனர்.

விசேடமாக இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட வவுனியா வடக்கு மாணவர்களையும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் இயங்கும் கிராமிய பாடசாலை மாணவர்களையும் ஊக்குவிக்கும் முகமாக இந்த நடடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வங்கியின் வவுனியா கிளையின் பிரதான முகாமையாளர் கே.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகாலமாக வவுனியா இலங்கை வங்கி கிளையில் கடமையாற்றும் ஊழியர்களின் தன்னார்வ நிதி பங்களிப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவி;த்த அவர், இவ்வாண்டும் இத்திட்டத்தை வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்த பாடசாலை அதிபர்கள் தத்தமது பாடசாலைகளில் சித்திபெற்ற மாணவர்களுடைய விபரங்களை வாடிக்கையாளர் சேவை முகாமையாளர் பிரிவில் கையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .