2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்துக்கு வெள்ளி விருது

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் அங்கமான பிளென்டி ஃபூட்ஸ் உணவுப் பிரிவில் வெள்ளி விருதை வென்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற விவசாயிகள் விருதுகள் மற்றும் விவசாய வர்த்தக விருதுகள் 2010 நிகழ்விலேயே இந்த விருதுவழங்கப்பட்டிருந்தது.

பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனம் இலங்கையர்களிடையே ஊட்டச் சத்து, புரதம் அடங்கிய உணவுப் பொருட்களின் பாவனையை அதிகரிப்பது குறித்து

அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் தானியப் பொருட்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதுடன், பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளிடமிருந்து சகாய விலையில் தானியங்களை கொள்வனவு செய்வதன் மூலம் பின்தங்கிய பகுதிகளில் வாழும் விவசாயிகளின் வளர்ச்சியிலும் பங்களிப்பு வழங்கி வருகிறது.

இந்த விருது வென்றமை குறித்து பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் ரத்வத்தே கருத்து தெரிவிக்கையில், 'ஊட்டச்சத்து நிறைந்த புதிய உணவுப் பொருட்களை இலங்கையர்களிடையே அறிமுகப்படுத்துவதில் எமது நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. எமது வாடிக்கையாளர்களிடையே வயது வேறுபாடின்றி புதிய தயாரிப்புகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சர்வதேச சந்தையிலும் எமது தயாரிப்புகளுக்கு சிறந்த வரவேற்பு காணப்படுகிறது' என்றார்.

பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனம் சிறந்த ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவை கொண்டுள்ளது. அண்மையில் வெற்றிகரமான உலர் ஐஸ்கிறீம் வகையொன்றையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

உலர் வலயத்திலுள்ள 15000க்கும் அதிகமான விவசாயிகளிடமிருந்து பிளென்டி ஃபூட்ஸ் விளைச்சல்களை கொள்வனவு செய்து வருகிறது. இந்த விவசாயிகளுடன் உடன்படிக்கையில் பிளென்டி ஃபூட்ஸ் கைச்சாத்திட்டுள்ளதன் மூலம் சந்தையில் நிலவும் விலையை விட அதிகளவு பணம் செலுத்தியே அவர்களின் விளைச்சல்களை இந்நிறுவனம் கொள்வனவு செய்கிறது.

பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு அரசிடமிருந்தும் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளான சமபோஷ, ஒன் த கோ மற்றும் சமயு போன்ற தயாரிப்புகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பிரதி விவசாய துறை அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவிடமிருந்து, பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் ரத்வத்தே வெள்ளி விருதை பெற்றுக் கொள்வதை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .