Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2010 நவம்பர் 10 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாட்லீட் ஃபைனான்ஸ் அறிமுகம் செய்துள்ள 'பாட்லீட் உங்கள் வாசலில்' சேவைக்கு வாடிக்கையாளர் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் சென்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது மற்றும் பாதுகாப்பான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது போன்ற செயற்பாடுகள்இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
நாடுபூராகவுமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெறுவதுடன் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் புதிதாக கிளைகளை ஆரம்பித்துள்ளதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகையை பாட்லீட் ஃபினான்ஸ் வழங்குகிறது.
பாட்லீட் ஃபினான்ஸ் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டத்தில் நிலையான வைப்புகள் ஆரம்பிப்பதற்கும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இலங்கையின் எப்பகுதியிலிருந்தும் இந்த நிலையான வைப்பை ஆரம்பிக்க முடியுமெனவும் இதற்காக வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது தமக்கு நிலையான வைப்புக் கணக்கொன்று ஆரம்பிப்பதற்கான தேவை நிலவுவதை பாட்லீட் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு அறிவிப்பது மாத்திரமாகும். பின்னர் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் வாடிக்கையாளரின் இருப்பிடத்துக்கு விஜயம் செய்து முழு விபரங்களையும் வழங்கி கணக்கையும் ஆரம்பித்து கொடுப்பார்.
இம் முறையின் மூலம் காசோலைகள் பாரமெடுக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளரின் பணம் பாதுகாப்பான முறையில் கையாளப்படுவதுடன், வீண் அலைச்சல்களையும் மேற்கொள்ளத் தேவையில்லை. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் பணத்தை நிறுவனத்தின் பிரதிநிதிக்கு கையளித்த திகதியிலிருந்து வட்டி கணக்கிடப்படுவது விசேட அம்சமாகும்.
அத்துடன் பாட்லீட் ஃபைனான்ஸ் மூலம் வாடிக்கையாளர்கள் மாதாந்தம் செலுத்த வேண்டிய கட்டணங்கள் அவர்களின் இருப்பிடங்களுக்கு வந்து திரட்டும் திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் குறித்த திகதிக்கு முன்னர் கட்டணத்தை செலுத்த தவறியமைக்கான அநாவசியமாக தண்டப்பணங்கள் செலுத்த வேண்டிய அவசியமும் தவிர்க்கப்படுகிறது.
இந்த புதிய சேவை குறித்து பாட்லீட் நிறுவனத்தின் உதவி பொது முகாமையாளர் அஜித் எதிரிசிங்க கருத்து தெரிவிக்கையில், 'எமது நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நவீன வசதியான சேவைகளை அறிமுகம் செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கும் நிறுவனமாகும். இதனடிப்படையில் நாம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவமாகும். எமது நிறுவனத்தின் பிரதான குறிக்கோளாக திகழ்வது வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாத்து அவர்களுக்கு வசதியாக சிறந்த சேவையாற்றுவதாகும் என்றார்.
'ஆட்டோ லீசிங் அண்மையி;ல் நாம் அறிமுகம் செய்த சுய வேலைவாய்ப்புத் திட்டம். இதன் மூலம் ஒருவர் முச்சக்கர வண்டியின் விலையில் ரூபா. 28000 செலுத்தி ஒரு புதிய ஆட்டோ உரிமையாளராகலாம்.
பல்வேறுபட்ட துறைகளில் பாட்லீட் நிறுவனம் தமது சேவைகளை இலங்கையில் தமது வாடிக்கையளார்களுக்கு வழங்கி வருவதுடன், தேயிலை முகவர் துறையிலும் முன்னிலை வகிக்கிறது. ஆசியாவில் சிறப்பாகவும் இந்தியாவில் முன்னிலையிலும் திகழும் காப்புறுதி நிறுவனமான எல்.ஐ.சி. இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. எமது குழுமம் 104 வருடங்கள் இலங்கையில் சேவையாற்றி வருகின்றது' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
50 minute ago
02 Jul 2025