2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

'மஞ்சி'யின் கல்விசார் முன்னேற்ற நடவடிக்கைகளுக்காக விருது

Super User   / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டின் கல்விசார் திட்டங்களை முன்னேற்றும் வகையில் 'மஞ்சி' முன்னெடுத்துவரும் வௌ;வேறு
திட்டங்களை கௌரவிக்கும் வகையில் அண்மையில் நடைபெற்ற சிறந்த கூட்டுறவு குடிமகன் விருதுகள் வழங்கும் நிகழ்வில் விருது வழங்கப்பட்டிருந்தது.

இவ்விருது வழங்கும் நிகழ்வில் விருது பெற்ற 10 நிறுவனங்களில் ஒன்றாக மஞ்சி தெரிவாகியிருந்தது. கல்விசார் நடவடிக்கைகளை முன்னேற்ற மஞ்சி வழங்கி வரும் பங்களிப்புகளுக்காக உயர் விருதையும் பெற்றுக் கொண்டது.

மஞ்சி முன்னெடுக்கும் கல்விசார் அபிவிருத்தி நடவடிக்கைகளில், மஞ்சி டிக்கிரி புலமைப்பரிசில், மஞ்சி ஹபனா புலமைப்பரிசில் செயற்திட்டம், மஞ்சி சமக கமட்ட சரண, சிபிஎல் நணெ மதுர, மஞ்சி சமக பியும்வில போன்றன உள்ளடங்குகின்றன.

மஞ்சி டிக்கிரி புலமைப்பரிசிலுக்கு விசேட விருது கிடைத்திருப்பதுடன், இந்த திட்டத்தின் மூலம் கல்வி கற்கும் உரிமையை ஒவ்வொரு மாணவருக்கும் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அவர்கள் எதிர் கொள்ளும் பொருளாதார பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய மாதாந்தம் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

1997 ஆம் ஆண்டு ஆரம்பமாக மஞ்சி டிக்கிரி புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் 2000க்கும் அதிகமான மாணவர்கள் இது வரை பயன்பெற்றுள்ளதுடன், அவர்களின் திறமை வெளிப்பாட்டுக்கமைய அவர்களுக்கு மேலும் உதவிகளை வழங்கப்படுவது இந்த திட்டத்தின் விசேட அம்சமாகும்.

மஞ்சி ஹபனா திட்டத்தின் மூலம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கென இலவசமாக வாராந்தம் செயலமர்வுகள் நடத்தப்படுவதுடன், இதற்கு மேலதிகமாக சஞ்சிகைகளின் மூலம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அறிவை விருத்தி செய்வதில் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. இத்திட்டத்தின் மூலம் வருடாந்தம் 125000க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மஞ்சி சமக கமட்ட சரண திட்டத்தின் மூலம் கிராமிய மட்டத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறுவிதமான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சிபிஎல் நணெ மதுர, அறிவை விருத்தி செய்யும் நோக்கில் பன்னிபிட்டிய, கொட்டாவ பகுதியில்
அமைந்துள்ள சிபிஎல் நிறுவனத்தின் முன்னால் நிறுவப்பட்டுள்ளது. பிரதேசவாசிகளின் அறிவை விருத்தி செய்யும் வகையில் இந்த மத்தியநிலையம் அமைந்துள்ளதுடன், நூலகமொன்றும் இதில்
உள்ளடங்கியுள்ளமை விசேட அம்சமாகும்.

மஞ்சி சமக பியும்வில திட்டத்தின் மூலம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பின்தங்கிய வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் செயன்முறை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் நடைபெற்ற ளுடுஐஆ சிறந்த வர்த்தக நாம விருதுகள் 2010 இல் மஞ்சியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக சேவை திட்டங்களுக்காக வெள்ளி விருதும்  வழங்கப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--