Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹேமந்த்)
கிளிநொச்சியில் கொமர்ஷியல் வங்கியின் சேவைகள் புதிய இடத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
டிப்போ சந்திக்கருகில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட பணிமனையில் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த கொமர்ஷியல் வங்கி, தற்போது கரடிப்போக்குச் சந்திக்கு அருகாமையில் விரிவாக்கப்பட்ட புதிய பணிமனையில் தனது சேவைகளை மேம்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் முதற்தரக் கிளையாக இந்தப் பணிமனை இயங்குமென வங்கியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விரிவுபடுத்தப்பட்ட புதிய பணிமனையின் சேவைகள் கிளிநொச்சி மாவட்டத்தின் வாடிக்கையாளர்களுக்கு உதவியாக இருக்கும். விவசாயிகளை அதிகமாகக்கொண்ட இந்த மாவட்டத்துக்கு இது பெரிய வரப்பிரசாதமென கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் திரு.சுப்பையா மனோகரன் தெரிவித்துள்ளார்.
36 minute ago
2 hours ago
5 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
5 hours ago
14 Dec 2025