2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

'ஹமீடியா'வின் கிறிஸ்மஸ் பரிசு திட்டம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் ஆண்கள் ஆடைத்துறையில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனமான ஹமீடியா, 'கிறிஸ்மஸ் குதூகலத்தில் இணைந்து கொள்ளுங்கள்' (Join the Christmas Cheer) என்ற வருட இறுதி ஊக்குவிப்பு திட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ளது.

தமது வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதத்திலான பல்வேறு பரிசுகள் மற்றும் வெகுமதிகளை வழங்கும் இத்திட்டமானது, இந்தப் பண்டிகைக்காலத்தில் சில்லறை வர்த்தகத் துறையில் முன்னெடுக்கப்படும் மிகப் பெரியதும் மிகச் சிறந்ததுமான ஊக்குவிப்புத் திட்டமாக அமையும் என கருதப்படுகின்றது.

இப்போது நடைமுறைப்படுத்தப்படும் Join the Christmas Cheer திட்டமானது 2010 டிசம்பர் 31ஆம் திகதி வரை நடைமுறையிலிருக்கும். இக்காலப்பகுதியில் நாடெங்கிலும் அமைந்துள்ள ஹமீடியா நிறுவனத்தின் காட்சியறைகளில் ஒரே தடவையில் 5,000 ரூபாவுக்கு அதிகமாக கொள்வனவை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கான சீட்டிழுப்பொன்று நடத்தப்படும்.

அடுத்த இரு மாதங்களிலும் நாடெங்கிலும் இருந்து கிடைக்கும் ஆயிரக்கணக்கான நுழைவுகளுள் சீட்டிழுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் 90 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் பரிசுகளை பெறுவதற்கு தகுதி பெறுவர்.

இவர்களுக்கு 20 iPADs சாதனங்கள், எடிசலாட் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் 10 பிளக்பெரி கையடக்கத் தொலைபேசிகள், அமாயா ரிசோர்ட்ஸ் அன்ட் ஸ்பாஸ் வழங்கும் அனைத்து வெகுமதிகளும் உள்ளடங்கிய 10 வவுச்சர்கள், 30 என்வோய் மற்றும் லீ பொன்ட் ஆடைகள், அடிடாஸ் வர்த்தக குறியீட்டுடனான 20 சப்பாத்துக்கள் போன்றவை பரிசுகளாக வழங்கப்படவுள்ளன.

இதற்கு மேலதிகமாக, 5,000 ரூபாவுக்கு அதிகமான கொள்வனவை மேற்கொள்ளும் அனைத்து வாடிக்கையாளர்களும் உடனடியாகவே 500 ரூபா பெறுமதியான அன்பளிப்பு வவுச்சரை பெற்றுக் கொள்வர்.

ஹமீடியா நிறுவனத்தின் துழஇன் வாந ஊக்சளைவஅயள ஊக்நநச ஊக்குவிப்புத் திட்டத்திற்கான உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளராக  எடிசாலட் நிறுவனம் கைகோர்த்துள்ளது. அத்துடன் அமாயா ரிசோர்ட்ஸ் அன்ட் ஸ்பாஸ் நிறுவனம் மற்றும் உத்தியோகபூர்வ விருந்தோம்பல் பங்காளராகவும், அடிடாஸ் உத்தியோகபூர்வ விளையாட்டு ஆடைகளுக்கான பங்காளராகவும் ஒன்றிணைந்துள்ளன.

பிரதானமாக முன்னெடுக்கப்படும் Join the Christmas Cheer ஊக்குவிப்புத் திட்டத்திற்கு மேலதிகமாக சம்பத் வங்கி, எச்.எஸ்.பீ.சி., அமெக்ஸ், ஸ்டார் பொயின்ட் மற்றும் நெக்ஸஸ் போன்ற வலைமைப்பகளுடன் பங்காளராக இணைந்துள்ள ஹமீடியா நிறுவனமானது, விஷேட கழிவுகளையும் வெகுமதிகளையும் இந்தப் பண்டிகைக்காலம் முழுவதும் வழங்குகின்றது. இது, கிறிஸ்மஸ் குதூகலத்தை மேலும் உத்வேகமாகவும் பரந்துபட்டதாகவும் மாற்றுகின்றது.

ஹமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பௌசுல் ஹமீட் இது தொடர்பில் கூறுகையில், 'நாடெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைக் காலங்களில் கொள்வனவை மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு  கவர்ச்சிகரமான  வெகுமதிகளை வெல்வதற்கான உன்னத வாய்ப்பினை வழங்கும் மகிழ்ச்சிகரமான இந்த ஊக்குவிப்புத் திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்துவைப்பதையிட்டு நாம் சந்தோசமடைகின்றோம்' என்றார்.

அத்துடன் 'அதிகமாக கொள்வனவு செய்யும் போது அதிகளவு வெற்றி வாய்ப்பு உள்ளமையே இதிலுள்ள விஷேட அம்சமாகும். தங்களது ஆடைக் கொள்வனவை மேற்கொள்வதற்காக இவ்வாறான பண்டிகைக்கால ஊக்குவிப்புத்திட்டம் ஆரம்பிக்கப்படும் வரை பலர் காத்திருந்ததை நான் தனிப்பட்ட ரீதியில்  அறிவேன். கொழும்பு நகரில் மட்டுமல்ல, நாட்டின் ஏனைய இடங்களிலும் இவ்வாறான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்த வண்ணமுள்ளது.

‘Real Men Wear Real Clothes’ என்ற எமது தத்துவத்தின் அடிப்படையில் உலகின் முன்னணி வர்த்தக குறியீடுகளை வழங்குவதனூடாக எமது வாடிக்கையாளர்கள் உண்மையான பெறுமதியுடன் பொருட் கொள்வனவு செய்வதை நாம் எப்பொழுதும் ஊக்குவிக்கின்றோம்' எனத் தெரிவித்தார்.

போலியான மற்றும் அசலற்ற ஆடைகளுக்கு எதிராக போராடும் விடயத்தில் கடந்த பல வருடங்களாக ஸ்திரமான பிரபலத்தைப் பெற்றுள்ள ஹமீடியா நிறுவனம், அசல் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் பெருமை கொள்கின்றது. இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மத்தியில் சிறப்பான இடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இவையும் முக்கிய காரணங்களாகும்.

ஹமீடியாவின் சொந்த தயாரிப்புகளான என்வோய், ஊஏ, லீ பொன்ட், சிக்னேச்சர் போன்ற வர்த்தக குறியீடுகள் இப்போது இலங்கையில் ஒவ்வொரு வீட்டிலும் உச்சரிக்கப்படும் வர்த்தக குறியீடுகளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .