2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

எடிசலாட் பிற்கொடுப்பனவு இணைப்புக்கு இலவச கையடக்க தொலைபேசி

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிற்கொடுப்பனவு இணைப்புகள் ஒவ்வொன்றை கொள்வனவு செய்யும்போது இலவச கையடக்கத் தொலைபேசிகளை அந்த இணைப்புகளுடன் வழங்கும் புதிய செயற்திட்டத்தை எடிசலாட் முதற் தடவையாக இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த சலுகை எடிசலாட்டின் 'டிஸ்கவர்' இணைப்புகளுக்கு செல்லுபடியாகும் என எடிசலாட் அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் இலங்கையில் கையடக்க தொலைபேசி சந்தையில் முன்னணியில் திகழும் நிறுவனத்தின் நோக்கின் அடிப்படையிலேயே இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


வாடிக்கையாளர்களுக்கு தமது கையடக்க தொலைபேசிகளை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தையும்; ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. Blackberry Curve 8520, Nokia 2690, 5130, C3, E5, Samsung C5212i, Marvel, Corby Pro my;yJ Alcatel OT-606, OT-505 மற்றும் HTC Smart போன்ற வௌ;வேறு வகைத் தெரிவுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் தமக்கு விருப்பமான கையடக்க தொலைபேசியை தெரிவு செய்ய முடியும். இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு குறுகிய காலப்பகுதியினுள் பெருமளவான வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை பெற்றுள்ளது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களின் புதிய தொலைபேசியை கொள்வனவு செய்ய அல்லது தம்வசமுள்ள பழைய தொலைபேசிக்கு பதிலாக புதிய ஒன்றை கொள்வனவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.


பிளக்பெரி மற்றும் எச்டிசி ஸ்மார்ட் ஃபோன்களுக்கான கேள்வி சந்தையில், அவற்றின் அதியுயர் தொழில்நுட்பத்திறன்,  மனதைக் கவரும் வடிவமைப்பு போன்ற காரணிகளால் அதிகரித்து வருகிறது. 'அனைவருக்கும் பிளக்பெரி' எனும் திட்டத்துக்கு அமைய இலங்கையில் பிளக்பெரி பாவனையை அதிகரிக்கும் திட்டத்தை எடிசலாட் முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் பிளக்பெரி வர்த்தக நோக்கத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது எனும் ஊகத்தை கலைத்திருந்தது. அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் கையடக்க தொலைபேசி சேவை சந்தையை எடிசலாட் மாற்றியமைத்துள்ளது.


இது குறித்து எடிசலாட் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'தரமான இணைப்புகளையும், தொழில்நுட்பத்தையும் வழங்குவதில் மட்டும் நாம் முன்னிலையில் திகழ்வது மாத்திரமல்லாமல், புதிய கவர்ச்சிகரமான சலுகைகளையும் எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் முன்னணியில் திகழ்கிறோம். இது போன்ற சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் அனுகூலம் வாய்ந்தவை, ஏனெனில் தமது நாளாந்த தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு இலவசமாக கையடக்கத் தொலைபேசி ஒன்றை பெறுகின்றனர்' என்றார்.


இந்த இலவச தொலைபேசி குறித்த மேலதிக விபரங்களை எந்தவொரு எடிசலாட் அவுட்லட்டிலும், விநியோகத்தர் அவுட்லட்களிலும், ஷொப் இன் ஷொப் அல்லது எடிசலாட் வாடிக்கையாளர் சேவை நிலையங்களில், www.etisalat.lk அல்லது வீட்டிற்கே கொண்டுவந்து சேர்க்கும் திட்டத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளமுடியும். மேலும் 0722 222 333 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் விபரங்களை மும்மொழிகளிலும் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--