2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

சிறிய, மத்திய வர்த்தக நிறுவனங்களுக்காக எடிசலாட் நடத்திய 'எடிசலாட் பிஸ்னஸ் எட்ஜ்'

Super User   / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தொலைத் தொடர்பாடல் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டு வரும் எடிசலாட் லங்கா நிறுவனம், இலங்கையில் முதற் தடவையாக, சிறிய மற்றும் மத்திய வர்த்தக நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் 'எடிசலாட் பிஸ்னஸ் எட்ஜ்' எனும் செயலமர்வை அண்மையில் 'எடிசலாட் ஹப்' இல் ஏற்பாடு செய்திருந்தது.

நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏற்பட்டுள்ள வர்த்தக சந்தர்ப்பங்களை எவ்வகையில் பயன்படுத்திக் கொள்வது குறித்து சிறிய மற்றும் மத்திய வர்த்தக துறையைச் சேர்ந்த எடிசலாட் வாடிக்கையாளர்களுக்காக விசேடமாக இந்த செயலமர்வு நெறிப்படுத்தப்பட்டிருந்தது.

இத்துறையில் இலங்கையில் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்கும் நிறுவனமொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது செயலமர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபவம் வாய்ந்த, பிரபல்யமடைந்த துறைசார் வல்லுநர்களினால் நடத்தப்பட்ட இந்த 'எடிசலாட் பிஸ்னஸ் எட்ஜ்' எடிசலாட் இனால் தொடர்ச்சியாக இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செயலமர்வுகளின் முதற்கட்டமாக அமைந்திருந்தது.
இந்த செயலமர்வில் தற்போது நிலவும் வர்த்தக நிலைவரங்கள், புதிய சந்தை வாய்ப்புகள், இலங்கையின் பொருளாதார நோக்கு, யுத்தத்திற்கு பிந்திய வர்த்தக வாய்ப்புகள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள போட்டிகரமான சூழ்நிலைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு, பொதியிடல் மற்றும் கூரியர் போன்ற பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த செயலமர்வில் பங்குபற்றியிருந்தனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் முன்னேற்றமடைந்து வரும் சிறிய மற்றும் மத்திய வர்த்தக தாபன துறைக்கு இது போன்ற ஒரு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை அத்துறையைச் சேர்ந்தவர்களிடையே சிறந்த வரவேற்பையும் பெற்றிருந்தது.

இந்த செயலமர்வு குறித்து எடிசலாட் லங்காவின் பணிப்பாளர் துமிந்திர ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு இது மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். இலங்கையின் எதிர்கால முன்னணி வர்த்தக துறையினருக்கு நாம் இது போன்ற செயலமர்வுகளின் மூலம், முக்கியமான கருத்துக்களை வழங்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த செயலமர்வை நாம் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக கருதுகிறோம். மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை இது போன்ற செயலமர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

முதலாவது எடிசலாட் பிஸ்னஸ் எட்ஜ் செயலமர்வை பிரபல்யமான பிரசன்ன பெரேரா மேற்கொண்டிருந்தார். இவர் இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

எடிசலாட் முன்னெடுத்த இந்த செயலமர்வில் கலந்து கொண்ட பங்குபற்றுநர்களின் பொதுவான கருத்து சிறிய மற்றும் மத்திய வர்த்தக துறையை அபிவிருத்தி செய்ய இது போன்ற திட்டங்களை முன்னெடுக்க ஏனைய கூட்டுறவு நிறுவனங்களும் முன்வரவேண்டும் என்பதாக அமைந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .