Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 09 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிட்டிஸன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் (CDB)நிறுவனமானது 2010 செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவுற்ற அரையாண்டில் அதிசிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளதாக இடைக்கால நிதி அறிக்கை வெளிப்படுத்துகின்றது. CDBயின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நாணயக்கார இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், "கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வரிக்கு முன்னரான இலாபம் 5 மடங்கு அதிகரிப்புடன் ரூ. 19 மில்லியனிலிருந்து ரூ. 112 மில்லியனாக அதிகரித்துள்ளது. CDBயின் வரலாற்றில் இது ஒரு சிறப்பான மைல்கல்லாகும்.
2010 செப்டம்பர் 30ஆம் திகதி முடிவுற்ற ஆறு மாத காலப்பகுதியின் வரிக்கு பின்னரான இலாபம் ரூ. 100 மில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை வரிக்கு பின்னரான வருமானம் ரூ. 882 மில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 21% வளர்ச்சியாகும்' எனத் தெரிவித்தார்.
CDBஇன் நிதி மற்றும் திட்டமிடலுக்கான உதவி பொது முகாமையாளர் தமித் தென்னகோன் கருத்து தெரிவிக்கையில், 'எமது மொத்த வைப்புத் தளம் ரூ.6 பில்லியனாக அதிகரித்தது. இது முன்னைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25% அல்லது 1.2 பில்லியன் வளர்ச்சியாகும். இக்காலப்பகுதியில் சராசரி மாதாந்த நிகர வைப்புகள் ரூ. 160 மில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகர வட்டி வருமானம் 69% அதிகரிப்புடன் ரூ. 365 மில்லியனாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது ரூ. 149 மில்லியன் அதிகரிப்பாகும். இரண்டாவது காலாண்டின் வட்டிக்குப் பின்னரான நிகர இலாபம் ரூ.65 மில்லியனாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது காலாண்டின் ரூ.35 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 185% வளர்ச்சியாகும்' எனத் தெரிவித்தார்.
'சந்தை வட்டி வீதத்தின் வீழ்ச்சி மற்றும் தந்திரோபாய உற்பத்தி மீளமைப்பு ஆகியன ஆரோக்கியமான இலாப இடைவெளியை பெற்றுக்கொள்ள உதவியதுடன், நிகர வட்டி வருமான வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கியது. நிலையான அதிசிறந்த நிதி பெறுபேறுகளை வழங்கும் ஒரு சிறப்பான வியாபார தளத்திலுள்ள தந்திரோபாய திறனை இது வெளிப்படுத்துகின்றது. எமது மொத்த சொத்து தளம் 17% அதிகரிப்புடன் ரூ. 7.8 பில்லியனாக காணப்பட்டது. இது 2010 மார்ச் 31 தொடக்கம் ரூ. 1.1 பில்லியன் அதிகரிப்பாகும்.
அதேவேளை, ஒட்டுமொத்த செயற்பாடற்ற கடன் விகிதம் 2010 செப்டம்பர் 30ஆம் திகதியில் 5.44%ஆக காணப்பட்டது. கடன் வளர்ச்சி மற்றும் செயற்பாடற்ற கடன் பங்கீட்டளவின் தொடர்ச்சியான குறைப்புகள், செயற்பாடற்ற கடன் விகிதத்தின் வீழ்ச்சிக்கு பங்களிப்பாற்றின. 2010 செப்டம்பர் 30ஆம் திகதி முடிவுற்ற ஆறு மாதத்தில் ஒரு பங்குக்கான வருமானம் ரூ. 2.52ஆக காணப்பட்டது. நிறுவனத்தின் ஏனைய பிரதான வியாபார பிரிவுகளிலும் இது போன்ற முன்னேற்றங்கள் காணப்படுகின்றன' என தென்னகோன் மேலும் தெரிவித்தார்.
ஊனுடீயின் கடன் பிரிவுக்கான உதவிப் பொது முகாமையாளர் சசிந்திர முனசிங்க தெரிவிக்கையில், 'அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் தலா வருமானத்தை 4,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் அரசாங்கத்தின் இலக்குக்கமைய, 2015/16 அளவில் நிதித் துறையின் கடன் வழங்கல் அளவினை ரூ. 550 பில்லியனாக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி எதிர்பார்க்கின்றது.
2010 ஏப்ரல் தொடக்கம் செப்டம்பர் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சராசரி வியாபார அனுமதிகள் ரூ. 433 மில்லியனாக காணப்பட்ட அதேவேளை, இக்காலப்பகுதிக்கான கொடுப்பனவுகள் ரூ. 2.2 பில்லியனாக காணப்பட்டது. எமது கடன்கள் கடந்த வருட பதிவான ரூ. 6.1 பில்லியனிலிருந்து 21% (ரூ. 1037 மில்லியன்) அதிகரித்துள்ளது. எமது வியாபார அணுகுமுறையானது கிராமிய வழங்கல் மற்றும் நகர நிதி திரட்டலில் தங்கியுள்ளது. இவ்வாறு நகர, கிராமிய பிரிவுகளிலும் எமது வியாபாரத்தை ஊக்குவித்து CDBஐ கிராமிய பொருளாதாரத்தின் நிகர வழங்குனராக நிலைநிறுத்தியுள்ளது' எனத் தெரிவித்தார்.
ஊனுடீயானது தற்போது வடக்கில் இரண்டு சேவை நிலையங்கள் மற்றும் மேல் மாகாணத்துக்கு வெளியே 16 கிளைகள் உள்ளடங்களாக நாடு முழுவதும் 32 கிளைகளைக் கொண்டுள்ளது. இந்தக் காலாண்டில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் மேலும் இரண்டு கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
6 hours ago
7 hours ago