2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

எடிசலாட் எலைட் கிளப் அங்கத்தவர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள்

Super User   / 2011 ஜனவரி 10 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'எடிசலாட் எலைட் கழகம்' ஸ்தாபிக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டதன் பின்னர் அதன் முதலாவது காலாண்டு பரிசிழுப்பு நிகழ்வு அண்மையில் கொழும்பு றோயல் கோல்ஃப் கழகத்தில் ....'எடிசலாட் எலைட் கழகம்' ஸ்தாபிக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டதன் பின்னர் அதன் முதலாவது காலாண்டு பரிசிழுப்பு நிகழ்வு அண்மையில் கொழும்பு றோயல் கோல்ஃப் கழகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் எலைட் கழக அங்கத்தவர்களும், கொழும்பு றோயல் கோல்ஃப் கழகத்தின் அங்கத்தவர்கள், எடிசலாட் கோல்ஃப் கிளாசிக் போட்டிகளில் வெற்றியீட்டியோர் மற்றும் எடிசலாட் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

எடிசலாட் இணைப்பை உபயோகிக்கும் கொழும்பு றோயல் கோல்ஃப் கழகத்தின் அங்கத்தவர்களுக்கு பிரதானமாக இந்த எலைட் கழகத்தின் அங்கத்துவம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த காலாண்டு பரிசளிப்பு நிகழ்வில் வெற்றியீட்டியவருக்கு 150,000 ரூபா பெறுமதியான கோல்ஃப் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் எலைட் கழக அங்கத்தவர்களுக்கு பல சலுகைகளும் அன்பளிப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.

எடிசலாட் இந்த எலைட் கழக அங்கத்தவர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள பிராந்திய கோலஃப் மைதானங்கள், கழகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பங்கேற்று பலன்களை எய்துவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. கோல்ஃப் கழக அங்கத்தவர்கள் மாதாந்தம் கோல்ஃப் உபகரண அன்பளிப்புகளை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எலைட் கழகத்தின் உறுப்பினரான டிரெக்ட் சொலுஷன்ஸ் இன்டர்நஷனல் லிமிட்டெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரியான பிரியங்க ஹபுகல்ல கருத்து தெரிவிக்கையில், 'எடிசலாட் நிறுவனத்தால், றோயல் கொழும்பு கோல்ஃப் கழகத்தின் உறுப்பினர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பு அதிகம் வரவேற்கத்தக்கது. ஏனைய நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது முற்றிலும் வித்தியாசமான அனுபவமாகும்' என்றார்.

மற்றுமொரு தலைவரான இன்ஃபோடெக் (பிரை) நிறுவனத்தின் தலைவர் சுசந்த பின்டோ கருத்து தெரிவிக்கையில், கோல்ஃப் விளையாடுபவர்களுக்கு அதிசிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இது வரை எடிசலாட் வழங்கியுள்ள அனைத்துவிதமான சேவைகளும் எனக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. எதிர்காலத்திலும் தொடர்ந்து தனது சிறந்த சேவைகளை எடிசலாட் வழங்குமென தாம் எதிர்பார்த்து நிறுவனத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

இது குறித்து எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்காளர்கள் அனைவருக்கும் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் எடிசலாட் உறுதி பூண்டுள்ளது. எலைட் கழகத்தின் மூலம் இந்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க எமக்கு முடிந்துள்ளது.' என்றார்.

எலைட் கழகத்தின் வருட இறுதி பரிசிழுப்பில், வெற்றியீட்டுபவருக்கு அபுதாபிக்கு சென்று கோல்ஃப் விளையாடுவதற்காக இருவருக்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. இதில் முதலாம் வகுப்பு விமான பயணச் சீட்டும், வர்த்தக வகுப்பு கவனிப்பும், அபுதாபி கோல்ஃப் கழகத்தில் 3 சுற்று கோல்ஃப் விளையாட்டு விளையாடவும் மேலும் அபுதாபி கோல்ஃப் கிளாசிக் சுற்றுப் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ எடிசலாட் எலைட் கழகத்தின் இணையத்தள வடிவமைப்பில் எடிசலாட் ஈடுபட்டுள்ளது. இந்த தள வடிவமைப்பு செயற்பாடுகள் பூர்த்தியடையும் பட்சத்தில் www.etisalateliteclub.com எனும் இணைய தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--