2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

எடிசலாட் வழங்கும் கிரக பலன்கள்

Super User   / 2011 மார்ச் 01 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் முதற் தடவையாக, வாடிக்கையாளரக்ள் கிரக பலன் குறிப்புகளை எடிசலாட் இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகளை எடிசலாட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதற்காக இலங்கையின் புகழ்பெற்ற சோதிட ஆலோசகரான சந்திரசிறி பண்டாரவை இந்த சேவையில் இணைத்துக் கொண்டுள்ளது. இனி கிரக பலன்கள் குறித்து அறிந்து கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்காமல் உங்கள் எடிசலாட் கையடக்க தொலைபேசியில் 567 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் இலகுவாகவும், துல்லியமாகவும் பெற்றுக் கொள்ள முடியுமென எடிசலாட் அறிவித்துள்ளது.

567 எனும் இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி, உங்கள் பிறந்த திகதி, நேரம் மற்றும் இடம் போன்ற விபரங்களை வழங்கி உங்களின் கிரக பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

இந்த சேவை தற்போது சிங்கள மொழியில் மட்டுமே அமுலில் உள்ளதுடன், விரைவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் இந்த சேவையை அமுலாக்க எடிசலாட் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த சேவை குறித்து எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'இந்த சேவை சந்தையில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. தொழில்நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் இணைத்து நாம் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளோம்' என்றார்.

சோதிட ஆலோசகர் சந்திரசிறி பண்டார கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் கிரகபலன்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த சேவையை அணுகுவதற்கு மக்களுக்கு போதியளவு நேரமின்மையும், வளப்பற்றாக்குறையும் காணப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தை உபயோகித்து இந்த சேவையை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதன் மூலம் அவர்களுக்கு சிறந்த பயனை பெற்றுக் கொள்ள முடியும்' என்றார்.
இலங்கையின் தொலைத்தொடர்புகள் துறையில் சக்திவாய்ந்த நிறுவனங்களில் ஒன்றான எடிசலாட், தொடர்ந்தும் இத்துறையில் புதிய பரிமாணங்களில் கால் பதித்த வண்ணமுள்ளது.

அத்துடன், பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள், விற்பனை கொடுப்பனவுகள், விசேட இணைப்புகள் மற்றும் இதர பல சேவைகளையும் வழங்கி வருகிறது. எடிசலாட், புதிய கண்டுபிடிப்புகள், தரம் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை வழங்குவதில் முன்னிலையில் திகழ்கிறது.

எடிசலாட் இலங்கையில் நிறுவப்பட்டதிலிருந்து 3 மில்லியன் வாடிக்கையாளர்களை மிகக்குறுகிய காலப்பகுதியில் கடந்துள்ளது. தொடர்ந்தும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதன் மூலம் அதிகளவு வாடிக்கையாளர்களை கவர்வது மற்றும் நிறுவனத்தை அதியுயர் நிலைக்கு கொண்டு செல்வது குறித்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

எடிசலாட் நிறுவனத்தின் பெறுமதி சேர்க்கப்பட்ட சேவை பிரிவின் உதவி முகாமையாளர் மதுர ஹிரிபிட்டிய, சோதிட ஆலோசகர் சந்திரசிறி பண்டார, எடிசலாட் நிறுவனத்தின் பெறுமதி சேர்க்கப்பட்ட சேவை பிரிவின் தலைமை அதிகாரி சன்ன முனசிங்க மற்றும் E3X குளோபல் பிரைவேட் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமில கன்கானம்கே ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--