Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 01 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி நோய்க்காவி தடுப்பு குறியீடான மோர்ட்டீன், கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் வெள்ளத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு ஒரு தொகை மோர்ட்டீன் நுளம்புச் சுருள்களை வழங்கியுள்ளது.
இந்நிகழ்வு கடந்த இரண்டாம் திகதி அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான நுளம்புச் சுருள்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டன.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் மூலம் இந்த நுளம்புச் சுருள்கள் பாதிப்படைந்த மக்களுக்கு விநியோகப்படவுள்ளன. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டம் குறித்து ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ராகுல் முர்காய் கருத்து தெரிவிக்கையில், 'எப்போதும் மோர்ட்டீன் நுளம்புகளை ஒழிப்பது தொடர்பில் நாடு பூராகவும் தனது விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இந்த செயற்திட்டத்தின் வரிசையில் இந்த நுளம்புச் சுருள்கள் கையளிப்பும் அடங்குகிறது' என்றார்.
ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் பொருள் குழும முகாமையாளர் சுராங்கி பெர்னாண்டோ கருத்து தெரிவி;க்கையில், 'அண்மையில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிழக்கு மற்றும் தென் மாகாணங்களைச் சேர்ந்த பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த வெள்ள நிலை காரணமாக நுளம்புகள் பரவுவதற்கான சூழ்நிலை அதிகம் காணப்படுகிறது. இந்நிலையிலேயே நாம் இந்த பாதிப்படைந்த மக்களுக்கு மோர்ட்டீன் நுளம்புச் சுருள்களை வழங்க முன்வந்தோம்' என்றார்.
ரெக்கிட் பென்கீசரினால் சந்தைப்படுத்தப்படும் மோர்ட்டீன் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் புகழ்பெற்ற பூச்சி மற்றும் நுளம்பு பாதுகாப்பு தயாரிப்பு என்பதுடன், இது தவிர, மேலும் உன்னத படைப்புகளான டெட்டோல், ஹார்பிக், லெய்சோல், எயர்விக், வீட், ஸ்றெப்சில்ஸ், கார்டினல் மற்றும் கோல்மன்ஸ் ஆகியனவும் சந்தைப்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களிடம் ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் விற்பனை பணிப்பாளர் சின்கிளெயர் குருஸ் மோர்ட்டீன் நுளம்புச் சுருள்களை கையளிப்பதையும், அருகில் ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் பொருள் குழும முகாமையாளர் சுராங்கி பெர்னாண்டோ மற்றும் ஏற்புதடுப்பு பிரிவின் சிரேஷ்ட வர்த்தக நாம முகாமையாளர் சமீனா பள்ளி ஆகியோர் காணப்படுகின்றனர்.
2 hours ago
2 hours ago
8 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
8 hours ago
19 Sep 2025