2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

மக்கள் வங்கியின் சேவை நிலையம் வவுனியா கடை வீதியில் திறந்துவைப்பு

Super User   / 2011 மார்ச் 05 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

மக்கள் வங்கியின் மேலும் ஒரு சேவை  நிலையம் வவுனியா கடை வீதியில் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தில் இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்;பட்டது.

வாடிக்கையாளர்களுடைய நலன்கருதியே இந்த நிலையம் திறக்கப்பட்டது என மக்கள் வங்கியின் பொது முகாமையாள்ர் என்.வசந்தகுமார்  தெரிவித்தார்.

மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ.கருணஜீவா வங்கியின் சிரேஸ்ட உயர் அதிகாரிகள், நகர சபை தலைவர், பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் வர்த்தக முக்கியஸ்த்தர்கள் உள்ளிட்ட பலர் திறப்பு விழாவில் கலந்துசிறப்பித்தனர்.

அண்மைக்காலமாக அரச , தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் வவுனியாவினை மையமாகக்கொண்டு கிளைகளை திறந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .