2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இரண்டாவது முறையாக அதி சிறந்த தயாரிப்புக்கான விருதை பெறும் 'டிசைனர் ரோலர் டோர்'

A.P.Mathan   / 2011 ஜூன் 22 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமில் இன்டஸ் ரீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 'டிசைனர் ரோலர் டோர்', அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 'கெதல்ல' கட்டுமாண கண்காட்சியில் வருடாந்தம் வழங்கப்படும் சிறந்த தயாரிப்புக்கான விருதை இவ்வாண்டும் தொடர்ச்சியான இரண்டாவது முறையாக வென்றிருந்தது.

அவுஸ்திரேலிய தொழில்நுட்பத்துக்கு அமைவாக புதிய இயந்திர சாதனங்கள் கொண்டு தயாரிக்கப்படும் 'டிசைனர் ரோலர் டோர்' இம்முறை கெதல்ல கண்காட்சியில் பங்குபற்றிய ஏனைய நிறுவனங்களின் பல்வேறு தயாரிப்புகளுடன் போட்டியிட்டு முன்னணியில் தெரிவானதன் மூலமாகவே இந்த விருதுக்காக நடுவர் குழாமினால் பரிந்துரைக்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்வில் நிர்மாண மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச, அமில் இன்டஸ் ரீஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிஹான் அபேசுந்தரவிற்கு விருதை வழங்குவதையும் அருகில் அரச கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் தயாசிறி திசேரா காணப்படுவதையும் படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .