2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

ஆசிய தலைமைத்துவ விருது வழங்கும் நிகழ்வில் வர்த்தக புத்தாக்க விருதினைப் பெற்றுள்ள ஜனசக்தி

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துபாய் தாஜ் பலஸ் ஹோட்டலில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற ஆசிய தலைமைத்துவ விருதுகள் (Asian Leadership Awards) நிகழ்வில் ஜனசக்தி இன்சூரன்ஸ் பீ.எல்.சி. நிறுவனம், மிகவும் வரவேற்பைப் பெற்ற 'வர்த்தக புத்தாக்க விருதினை'' பெற்றுக் கொண்டது.

ஆசிய தலைமைத்துவ விருதுகள் (ALA) என்பது முழுமையாக சாதனையாளர்கள், அதியுயர் சாதனையாளர்கள் மற்றும் எதிர்கால வர்த்தகத் தலைவர்களை அங்கீகரிப்பதுடன், ஆசியாவின் சிறந்தவற்றில் இருந்து மிகச் சிறந்தவைகளை தெரிவு செய்து உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டும் ஒரு நிகழ்வாகவும் அமைந்துள்ளது. தத்தமது வர்த்தகங்களை இக்கட்டான நேரங்களில் முன்கொண்டு செல்லுதல் மற்றும் தமது நடப்புகால குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காகவும் அவற்றை நிர்வகிப்பதற்காகவும் சிறந்த வர்த்தக முறைமைகளைப் பிரயோகித்தல் ஆகிய விடயங்களில் இத்துறையில் உள்ளவர்களுக்கு காணப்படும் ஆற்றல் இவ்விருதுகளின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டு, வெகுமதியளிக்கப்படுகின்றது.

ஜனசக்தி நிறுவன சந்தைப்படுத்தல் பிரிவு தலைமை அதிகாரியான பெடி வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், 'காப்புறுதித் துறையில் புதியதொரு தராதரத்தை உருவாக்கும் வகையிலமைந்த எமது திருப்புமுனையான புதிய உற்பத்தி அபிவிருத்திகள், புத்தாக்க விநியோகவழி அபிவிருத்தி மற்றும் சேவை விரிவாக்கம் போன்றவற்றின் பெறுபேறாகவே இந்த மிக உன்னதமான சாதனையை எம்மால் நிலைநாட்ட முடிந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சர்வதேச ஜூரி சபை ஒன்றினால் நாம் புகழ்ந்துரைக்கப்பட்டதன் மூலமாக இந்த கௌரவ விருது கிடைக்கப் பெற்றமையானது, எம்மை ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ள அதேநேரம் தன்னடக்கமுள்ளவர்களாகவும் ஆக்கியுள்ளது என்பதை சொல்லத் தேவையில்லை'' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த அங்கீகாரத்தின் மூலமாக ஜனசக்தி நிறுவனம் மிகவும் விஷேடமாக கௌரவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 'சந்தைப் பங்கினை தம்வசப்படுத்துவதன் ஊடாக வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களின் பெறுமதியை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட, ஆக்கிரமிக்கும் வகையிலான சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக குறியீட்டு முகாமைத்துவ உபாயங்களின் காரணமாகவே இவ்வாறான சர்வதேச அங்கீகாரத்தை பெற முடிந்துள்ளது'' என்றும் அவர் குறிப்பிட்டார்.  

ALA விருது வழங்கல் நிகழ்வானது வர்த்தகங்களின் ஆசியக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்டதுடன் கைத்தொழில் குழுமத்தைச் சேர்ந்த நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற நிறுவனங்கள் இதற்கு ஆதரவு வழங்கியிருந்தன. CMO Asia, CMO Council மற்றும் World Brand Congress ஆகியன அதனது உபாய பங்காளர்களாக திகழ்கின்றன. எண்ணத்தை தூண்டுகின்ற தலைமைத்துவத்தின் மூலம் உயர்மட்ட அறிவுப் பரிமாற்றத்திற்காக ALA விருது வழங்கல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதுடன், ஆசியாவில் அனைத்து கைத்தொழில் பிரிவுகளிலும் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்திலுள்ள அதிகாரிகளிடையே உள்ள வலைப்பின்னலை கண்காணிக்கும் பணியையும் மேற்கொள்கின்றது. பிரமாண்டமாக இடம்பெற்ற விருது வழங்கல் விழாவில் சுமார் 150 சிரேஷ்ட தலைவர்களும் தீர்மானம் எடுக்கும் அந்தஸ்திலுள்ள அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதற்கு மேலதிகமாக பல்வேறு நாடுகளையும் சேர்ந்த அதிகாரம் பெற்ற தரப்பினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் சமுகமளித்திருந்த இந்நிகழ்வு, அறிவையும் அனுபவங்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கு இடமளிக்கும் வகையில் அமைந்திருந்தது.  

கடந்த மாதம் இடம்பெற்ற இரண்டாவது CMO Asia Awards நிகழ்வின் போது, மிகச் சிறந்த வர்த்தக குறியீடிடல் மற்றும் சந்தைப்படுத்தலுக்காக வங்கியியல், நிதியியல் சேவைகள் மற்றும் காப்புறுதிப் பிரிவில் 'வர்த்தக குறியீட்டு சிறப்புத்துவ விருதினை'' (Award For Brand Excellence) தட்டிச் சென்றதன் மூலம் ஜனசக்தி மிகவுயர்ந்த கௌரவத்தைப் பெற்றுக் கொண்டது. அதேவேளை, ஆசியா முதல் அவுஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு வரையான பல்வேறு நாடுகளின் பங்கேற்புடன் இரண்டாவது தொடர்ச்சியான வருடமாகவும் அண்மையில் நடைபெற்ற CMO Awards நிகழ்வின் போது காப்புறுதிப் பிரிவின் கீழ் விருது பெற்ற ஒரேயொரு இலங்கைக் காப்புறுதி நிறுவனம் என்ற பெருமையையும் ஜனசக்தி இன்சூரன்ஸ் தமதாக்கிக் கொண்டது.

SLIM Awards 2010 விருது வழங்கலில் ஜனசக்தி இன்சூரன்ஸ் மூன்று கௌரவங்களை தமதாக்கியது. இதன்மூலம், இவ்விருது வழங்கல் நிகழ்வில் சேவைப் பிரிவின் கீழ் அதிக எண்ணிக்கையான விருதுகளை தட்டிச் சென்ற இலங்கையின் ஒரேயொரு காப்புறுதிக் கம்பனி என்ற பெருமையை ஜனசக்தி பெற்றுக் கொண்டது. உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான விருதுகளை தொடர்ச்சியாகப் பெற்று வருகின்ற ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனமானது இலங்கையின் காப்புறுதித் துறையில் ஒளிமயமான வழியில் பயணிப்பதன் ஊடாக, தமது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக பெறுமதிகளை வழங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

ஜனசக்தி இன்சூரன்ஸின் கடந்த 16 வருடகால சேவையில் அந்நிறுவனத்தின் சிறந்த கூட்டாண்மை ஆளுகையானது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் நாட்டுக்கு மிகச் சிறந்ததும் தொடர்ச்சியானதுமான சேவையை பாரியளவில் வழங்கிய நிறுவனம் எனும் தோற்றப்பாட்டினை தோற்றுவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X