Kogilavani / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கிக் கிளையில் நேற்று திங்கட்கிழமை கிளை முகாமையாளர் ஏ.சத்திநாதன் தலைமையில் சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில், மாவட்ட சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் செல்வி ஞான சௌந்தரி, பிரதேச நன்நடத்தை உத்தியோகத்தர் திருமதி லன்ஸி, பிரதேச அபிவிருத்தி வங்கியின்பிராந்திய முகாமையாளர் கே.சந்தானம், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விசேட தொழில் பயிற்சி நிபுணர் கே.சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, சிறுவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டதுடன், சிறுவர்களுக்கான 'கெக்குழு' எனப்படும் அரும்புகள் சேமிப்புக் கணக்கும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நூற்றுக்கணக்காக சிறுவர்களும், பாடசாலை மாணவர்களும், பெற்றோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நேற்றைய தினம் பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிரதான சிறுவர் தின நிகழ்வு வயம்ப பிரதேசத்தில் நடைபெற்றதாகத் தெரிவித்த வங்கிக் கிளை முகாமையாளர் சத்தியநாதன், தமது கிளையில் 800 அரும்புகள் சேமிப்புக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026