2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ரமணி பெர்ணான்டோ – சன்சில்க் ஹெயார் அன்ட் பியுட்டி அக்கடமி கண்டியில்

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 04 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சன்சில்க் - ரமணி பெர்ணான்டோ ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் சிகை மற்றும் அழகுக்கலை கல்வியகம் தற்போது கண்டி நகரில் புதிய காரியாலயத்தை நிறுவியுள்ளது. இதற்கு சிட்டி அன்ட் கில்ட்ஸ் பூரண ஆதரவை வழங்கியுள்ளதுடன், பிராந்திய ரீதியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள முதலாவது கல்வியக காரியாலயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய கல்வியகத்தின் அங்குரார்ப்பணத்தின் மூலம் இலங்கையில் மத்திய பிராந்தியத்தைச் சேர்ந்த அழகுக் கலை மற்றும் சிகை அலங்கார துறையில் ஈடுபாடுடைய மாணவர்களுக்கு இந்த துறையில் தமது உயர் கற்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க பெரும் உதவியாக அமைந்துள்ளது. இந்த கல்வியகத்தின் மூலம் அழகுக் கலை மற்றும் சிகை அலங்கார துறைகளில் டிப்ளோமா, உயர்தர கற்கைகள் மற்றும் நிபுணத்துவ கற்கைகள் போன்றன வழங்கப்படவுள்ளன. மேலும் பிரத்தியேக வளக்கலை, சுய ஆளுமை விருத்தி, ஆங்கிலநெறி கற்கை பயிற்சி மற்றும் கூட்டுறவு பயிற்சிகள் போன்றனவும் வழங்கப்படவுள்ளன.

இந்த புதிய கல்வியகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறித்து சன்சில்க் வர்த்தகநாம முகாமையாளர் ஜூட் மார்டினோ கருத்து தெரிவிக்கையில் '2005ஆம் ஆண்டு முதல் நாம் அழகுக் கலை மற்றும் சிகை அலங்கார நிபுணரான ரமணி பெர்ணான்டோ உடன் மேற்கொண்டு வரும் உறுதியான பங்காளர் செயற்பாடுகளுக்கு இந்த புதிய கல்வியகமானது மேலும் வலுச் சேர்த்துள்ளது. ஆரம்பம் முதலே இந்த கல்வியகம் நாட்டின் எதிர்கால அழகுக் கலை நிபுணர்களை தயார்ப்படுத்துவதற்காக முன்னெடுத்துவரும் கற்கைநெறிகள் குறித்து யுனிலீவர் நிறுவனம் அதிகம் திருப்தியடைந்திருந்தது' என்றார்.

யுனிலீவர் தயாரிப்புகளில் கூந்தல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தயாரிப்புகளில் சன்சில்க் முன்னணியில் திகழ்வதுடன், அங்லோ-டச் தரப்படுத்தல்களுக்கு அமைவாக 'பில்லியன் டொலர் வர்த்தக நாமம்' ஆக தரப்படுத்தப்பட்டுள்ளது. சன்சில்க் ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் இதர கூந்தல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தயாரிப்புகள் 69 நாடுகளில் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது. 2009ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இணை படைப்புகள் திட்டத்துக்கு அமைவாக சர்வதேச ரீதியில் காணப்படும் முன்னணி சிகை அலங்கார வல்லுநர்களுடன் இணைந்து புதிய தரத்தில் உயர்ந்த தயாரிப்புகளை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. ஒவ்வொரு கூந்தல் தொடர்பான பிரச்சினையும் சிகை அலங்கார வல்லுநர் ஒருவருக்கு வழங்கப்பட்டு அவரின் ஆலோசனைக்கு அமைவாக தயாரிப்பை மெருகேற்றி வருகிறது.

கண்டி கல்வியகத்தின் புதிய மாணவர்களை வரவேற்று உரையாற்றிய ரமணி பெர்ணான்டோ கருத்து வெளியிடுகையில்... 'ஆறு வருடங்களுக்கு முன்னர் செப்டெம்பர் 1ஆம் திகதி சன்சில்க் - ரமணி பெர்ணான்டோ கல்வியகம் ஆரம்பமானது. முதலாவது மாதத்தில் 10 மாணவர்கள் மட்டுமே கல்வியகத்தில் இணைந்து கொண்டனர். ஆயினும் தற்போது ஒரு வருடத்துக்கு சுமார் 250 மாணவர்கள் எம்மிடம் கல்வி பயில்கின்றனர். நான் எப்போதும் எனது மாணவர்களுக்கு சன்சில்க் தயாரிப்புகளை உபயோகிக்க ஊக்குவித்து வருகிறேன். ஏனெனில் இவை நம்பிக்கைக்குரியவை. வருடாந்தம் யுனிலீவர் மூலம் வழங்கப்பட்டு வரும் புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பல அழகுக்கலை நிபுணர்களுக்கு தமது உயர்கல்வியை கூந்தல் அலங்காரம் மற்றும் அழகுக்கலை துறைகளில் மேற்கொள்ள பெரும் உதவியாக அமைந்துள்ளது' என்றார்.

இதுவரை சுமார் 4000 மாணவர்கள் இந்த கல்வியகத்தில் தமது கற்கைகளை பூர்த்தி செய்துள்ளனர். அதில் பலர் சர்வதேச தரம் வாய்ந்த பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளனர். புதிய சன்சில்க் - ரமணி பெர்ணான்டோ கல்வியகமானது இல.05, ஜோர்ஜ் ஈ டி சில்வா மாவத்தை, கண்டி எனும் முகவரியில் அமைந்துள்ளது. இந்த கல்வியகத்தில் முதல் பிரிவு மாணவர்களுக்கான கற்கைகள் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X