2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

கார்ட்டூன்களை பயன்படுத்தும் அனுமதியை பெற்றுள்ள அற்லஸ்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 22 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் முன்னணி எழுது கருவிகள், காகிதாதிகள் தயாரிக்கும் நிறுவனமான அற்லஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளில் சர்வதேச புகழ்பெற்ற கார்ட்டூன் வீரர்களின் உருவங்களை பயன்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறு அற்லஸ் நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ள அனுமதிப்பத்திரத்துக்கு அமைவாக கார்ட்டூன் வீரர்களான வோல்வரின், தோர், அயன் மேன் மற்றும் த ஃபோர்ஸ் அவென்ஜர் போன்ற மார்வல் சுபர் வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதில் சிறுவர்களிடையே காலாகாலமாக பிரபல்யம் பெற்ற குணச்சித்திரமான ஸ்பைடர் மேன் உருவமும் உள்ளடங்கியுள்ளது.

மேலும் உலகப் பிரசித்தி பெற்ற பென் உருவங்களான பென் 10, பென் 10 ஏலியன் ஃபோர்ஸ் மற்றும் பென் 10 அல்டிமேட் போன்றன இந்த தெரிவுகளில் உள்ளடங்கியுள்ளன. மேலும் பவர் பஃப் கேர்ள் உருவச் சித்திரத்தை உபயோகிப்பதற்கான அனுமதியும் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த அனுமதியை பெற்றுக்கொண்டமை குறித்து அற்லஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷாந்த ஹெனட்டிகே கருத்து தெரிவிக்கையில், 'குறிப்பிட்ட இந்த உடன்படிக்கைக்கு அமைவாக பிரபல்யமான கார்ட்டூன் வீரர்களின் உருவப்படங்களை சட்ட ரீதியாக உபயோகிப்பதற்கான அனுமதி எமக்கு கிடைத்துள்ளது. ஆயினும் தற்போது பெரும்பாலான காகிதாதிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சட்ட விரோதமாக இந்த உருவப்படங்களை பயன்படுத்தி வருகின்றன.

இவை சிறுவர்களிடையே தவறான அபிப்பிராயத்தை உருவாக்கக்கூடியதுடன், சட்ட ரீதியான தண்டனைக்கு உள்ளாகவும் நேரிடலாம். இதனால் அற்லஸ் தயாரிப்புகளை கொள்வனவு செய்வோர் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த தயாரிப்புகளை கொள்வனவு செய்கின்றனர்' என்றார்.

அற்லஸ் நிறுவனம் இலங்கையின் பாடசாலை மற்றும் அலுவலக காகிதாதிகள் விற்பனையில் அதிக சந்தை வாய்ப்பை கொண்டுள்ளது. மேலும் அற்லஸ் நிறுவனம் பேனைகள், அப்பியாச புத்தகங்கள் மற்றும் காகிதாதிகள் உள்ளடங்கலாக 500க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், இலங்கையின் எப்பாகத்திலும் கொள்வனவு செய்யக்கூடிய ஒரே காகிதாதிகள் தயாரிப்புகள் அற்லஸ் ஆகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .