Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 நவம்பர் 24 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் ஆடைக் கைத்தொழில்துறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய திட்டம் கண்டியில் நவம்பர் மாதம் முழுவதும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் மாபெரும் இசைக்களியாட்ட நிகழ்வு கண்டி கடபெ மைதானத்தில் பெருந்திரளான மக்கள் முன்னிலையில் இடம்பெற்றிருந்தது.
ஆடைக் கைத்தொழில் துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு தமது கலைத் திறமைகளை வெளிக்கொணர ஒரு வாய்ப்பாக 'அப்பரல் ஸ்டார்' எனும் மேடை இசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நாடு பூராகவும் இடம்பெற்று வருகிறது. கண்டி மாவட்டத்தை சேர்ந்த ஆடைக் கைத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களிலிருந்து இறுதிச் சுற்றுக்காக 38 பேர் தெரிவு செய்யப்பட்டு இந்த இறுதி நிகழ்வில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதற்கு மேலாக வீடு வீடாக சென்று ஆடைக் கைத்தொழில்துறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் வீதிகளில் பிரசார நடவடிக்கைகளில் முன்னெடுத்தல் போன்ற திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கண்டி மாவட்டத்தை சேர்ந்த 7 தொழிற்சாலைகளில் 9000 தொழிலாளர்களுக்கு இந்த களியாட்ட நிகழ்வில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
2015ஆம் ஆண்டளவில் ஆடைக் கைத்தொழில்துறை மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு கிடைக்கும் பங்களிப்பை 5 பில்லியன் ரூபாவாக உயர்த்துதல் எனும் இலக்கை நோக்காகக் கொண்டு செயற்பட்டு வரும் இந்த தேசிய செயற்றிட்டத்தை ஜாஃப் அமைப்பு முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த தேசிய திட்டத்தின் மூலம் இலங்கை ஆடைக் கைத்தொழில்துறையில் காணப்படும் வளங்கள் மற்றும் உண்மையான நிலையை வெளி உலகுக்கு கொணரும் வகையிலும், நாட்டின் பொருளாதாரத்துக்கு வழங்கும் பங்களிப்பு குறித்தும் விளக்கமளிக்கும் வகையில் நடவடிக்கைகயில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2011 பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி புத்தள பகுதியில் இடம்பெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒரு வருட காலப்பகுதியினுள் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதுவரை புத்தளம், பொலனறுவை, கந்தளாய், புனானி, திருகோணமலை, அநுராதபுரம், குருநாகல், களுத்துறை மற்றும் கண்டி போன்ற பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago