2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

ஆர்பிகோ தேசிய உற்பத்திகள் மற்றும் விநியோக பிரிவுக்கு இரு விருதுகள்

A.P.Mathan   / 2011 நவம்பர் 29 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் ஒன்றிணைந்த பொறியியலாளர்களின் சங்கத்தின் மூலம் நடத்தப்பட்ட INCO 2011 கண்காட்சியில் றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் தேசிய உற்பத்திகள் மற்றும் விநியோக பிரிவுக்கு சிறந்த தேசிய உற்பத்திகளுக்கான விற்பனை கூடத்துக்கான விருது வழங்கப்பட்டிருந்தது. அந்த விற்பனை கூடம், ஆர்பிகோ பிளாஸ்டிஷெல் நீர் தாங்கிகள், இறப்பர் தயாரிப்புகள், ஆர்பிடெக் நீர் பம்புகள் மற்றும் ஆர்பிகோ கிறீன் காஸ் கட்டமைப்பு போன்றவற்றை கொண்டு அமைந்திருந்தது. அண்மையில் இடம்பெற்ற INCO 2011 விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆர்பிகோ தயாரிப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படுவதுற்கு பிரதான காரணமாக அமைந்தது, தேசிய ரீதியில் தயாரிக்கப்படும் பொருட்களில் புதிய கண்டுபிடிப்பை உட்புகுத்தியிருந்ததுடன், சூழல் பாதுகாப்பான வகையில் கிறீன் காஸ் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டிருந்தமையுமாகும்.

மேலும், இலங்கையின் தேசிய கட்டட நிர்மாண சங்கத்தின் மூலம் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Construct 2011 கண்காட்சியில், சிறந்த வீட்டுப்பாவனை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமைக்கான விருது நிறுவனத்தின் தேசிய உற்பத்திகள் மற்றும் விநியோக பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கையின் புதிய புரட்சிகரமான கண்டுபிடிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த இந்த ஆர்பிகோ கிறீன் காஸ் கட்டமைப்பு சுற்றுலா ஹோட்டல்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், காரியாலயங்கள், தங்குமிடங்கள் மற்றும் வீடுகளில் பாவனைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பின் மூலம் நாளொன்றுக்கு உணவு தயாரிப்புக்கு தேவையான எரிவாயுவை 1 முதல் 7 மணித்தியாலங்கள் வரை பெற்றுக்கொள்ள முடியும். இந்த கட்டமைப்பு சூழல் பாதுகாப்பு முறைமைக்கு உள்ளடங்கியதாக அமைந்துள்ளது. இந்த கட்டமைப்பின் மூலம் இதர பயன்தரும் பொருளாக கொம்போஸ்ட் உரம் பெற்றுக்கொள்ள முடிவதன் காரணமாக பயிர்ச்செய்கையாளர்களுக்கும் பயன்தரும் வகையில் அமைந்துள்ளது.

19 வருடங்களுக்கு முன்னர், முதல் தடவையாக இந்நாட்டில் பிளாஸ்ரிக் நீர் தாங்கிகளை அறிமுகம் செய்த ஆர்பிகோ - ISO 9001:2008 தரச் சான்றிதழ் பெற்ற ஒரே பிளாஸ்ரிக் நீர் தாங்கி வகை என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று திரிபல் லேயர் தாங்கி, சம்ப் தாங்கி, குப்பை வாளிகள், செப்ரிக் தாங்கிகள் மற்றும் கொம்போஸ்ட் தாங்கிகள் போன்ற புதிய தீர்வுகள் பலவற்றை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிகோ அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளக, தொழிற்சாலை மற்றும் விவசாய பாவனை என மூன்று பிரிவுகளில் வடிவமைக்கப்பட்ட வௌ;வேறு செயற்றிறன் கொண்ட நீர் பம்பிகளின் 32 மாதிரிகள் சந்தையில் ஆர்பிடெக் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நீர் பம்பிகள் ஈயத்தினால் செய்யப்படாமல், துருப்பிடிக்காத இல.306 வகையிலான உலோகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளமையால் இந்த பம்பியினூடாக செல்லும் நீர் துரு, மாசு அற்றதாக விளங்குகிறது. இதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்களும் தவிர்க்கப்படுகின்றன. நீர் செறிவு குறைந்த பகுதியிலிருந்து அதிகளவு உயரமான பகுதிக்கு நீரை கொண்டு செல்லக்கூடிய தன்மை இந்த ஆர்பிடெக் நீர் பம்பிகளுக்கு உண்டு. அத்துடன் இந்த வகை நீர் பம்பிகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் “Arpitec doorstep service” சேவையினை பெற்றுக்கொள்ளவும் முடியும். இந்நாட்டின் நீர் பம்பிகள் தயாரிப்பு நிறுவனங்களுள் இதுபோன்ற ஒரு சேவையை அறிமுகம் செய்த முதல் நிறுவனம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகள் உள்ளடங்கலாக இந்த சேவை மேற்கொள்ளப்படுவதோடு, நீர்ப்பம்பி தொடர்பான பிரச்சினைகளுக்கு 48 மணி நேரத்தினுள் தீர்வு வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி சுமார் 80 வருட கால வரலாற்றை கொண்ட, இலங்கையிலுள்ள மிகப்பெரும் பல்துறை வர்த்த நிறுவனமாகும். இலங்கையின் பழமை வாய்ந்த நிறுவனம் என்பதுடன், தனியார் துறையில் சுமார் 30,000 பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிறுவனமானது சில்லறை, பெருந்தோட்டத்துறை, பங்கு முகவர் துறை, டயர், பிளாஸ்ரிக் மற்றும் நிர்மாண துறைகளில் கம்பனி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி லிமிடெட் போட்டித்தன்மையற்ற பலராலும் விரும்பப்படும் நம்பிக்கையை வென்ற நிறுவனமாகும். நாடு பூராகவும் பரந்து காணப்படும் வர்த்தக நாமமான ஆர்பிகோ, பலராலும் பல்வேறு தருணங்களில், வௌ;வேறு தேவைகளுக்காக பேசப்படும் நாமமாக பிரபல்யம் பெற்றுள்ளது.

பட விளக்கம்:
றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் தேசிய உற்பத்திகள் மற்றும் விநியோக முகாமையாளர் டெரிக் பெரேரா - INCO 2011 விருதுகள் வழங்கும் நிகழ்வில் விருதைப் பெற்றுக் கொள்வதை காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .